முப்பருப்பு முறுக்கு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2009%2Faug%2F14082009%2Fav60.jpg&hash=0c40c4816bca48b450f884614b9bd4043a1662fa)
தேவையானவை:
கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் - தலா ஒரு கப், உளுத்தம்-பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், பெருங்-காயத்தூள் - சிறிதளவு, பச்சரிசி - 2 கப், எள் - 6 டீஸ்பூன், வெண்-ணெய் - 3 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
பாசிப்பருப்பை தண்ணீரில் களைந்து நீரை வடித்துவிடவும். பருப்பை உலர வைத்து, கடாயில் லேசாக வறுத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பையும் உளுத்தம் பருப்பையும் வெறும் கடாயில் வறுக்கவும். அரிசியைத் தண் ணீரில் களைந்து, உலர வைத்து, லேசாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த அரிசி, பருப்பு வகைகளை ஆற வைத்து மாவாக்கிக் கொள்ளவும். இதனுடன் உப்பு, எள், வெண்ணெய், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும், கடாயில் எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் முறுக்கு அச்சின் உட்புறம் சிறிது எண்ணெய் தடவி, அதில் மாவைப் போட்டுப் பிழிந்து, பொரித்தெடுக்கவும்.