தயிர் சீடை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2009%2Faug%2F14082009%2Fav60a.jpg&hash=132d9cc1f5cf8bdde431a7043c84eb71f6a654b8)
தேவையானவை:
பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு - ஒரு கப், தயிர் - கால் கப், சீரகம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்-பூன், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசி மாவை வெறும் கடாயில் கை பொறுக்கும் சூட்டில் வறுத்துக் கொள்ளவும். இதனுடன், தேங்காய் துருவல், வெண்ணெய், பெருங்காயத்தூள், சீரகம், உப்பு சேர்த்து தயிர் விட்டுக் கலந்து, தண்ணீர் விட்டு உருட்டும் பதத்தில் பிசையவும். சீடைகளாக உருட்டி உலர்ந்த துணியில் போடவும். பிறகு அரை மணி நேரம் கழித்து, (ஈரப்பதம் போனதும்) எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.