கம்பு தோசை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2009%2Faug%2F14082009%2F112.jpg&hash=f4e265b592967d96f5da22520b2128fd6c6bbe70)
தேவையானவை:
கம்பு மாவு - ஒரு கப், அரிசி மாவு - 2 டீஸ்பூன், ரவை - ஒரு டீஸ்பூன், புளித்த தயிர் - அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், நெய் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
தயிரில் உப்பு கலந்து கம்பு மாவு, அரிசி மாவு, ரவை, வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாயை சேர்க்கவும். ஒரு டீஸ்பூன் நெய், தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இதை தோசைக்கல்லில் ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு தோசைகளாக வார்த்தெடுக்கவும்.