தேன் மருத்துவம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.theni.in%2Fnaturemedicine%2Fhoney.jpg&hash=be165f7ed61baa20e4fb319421352646b503ba67)
ஒரு நாளைக்கு குறைந்தது 2 தேக்கரண்டி தேன் பருகினால் கீழ்கண்ட நோய்கள் வராமலும், வந்தால் குணமாக்கிக்கொள்ளவும் முடியும். ஜீரணம், வயிற்று உறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்கள், இதயம் நுரையீரல் கோளாறுகள், நரம்பு தளர்ச்சி, சிறுநீரகம் சம்பந்தப்பட்டவை. இரத்த சோகை, தூக்கமின்மை, பல், தொண்டை, காது, கண் நோய்கள், சருமத் தொல்லைகள் ஆகியவற்றிற்கு தேன் சிறந்த மருந்து. உடல் பருமனைக் குறைக்க எளிய வழி தேன். காலையில் தினமும் தொடர்ந்து வெறும் வயிற்றில் 2 தேக்கரண்டி தேன் அருந்தினால் பலன் உறுதி. மிகக் களைப்பான நிலையில் ஒரு தேக்கரண்டி தேன் அருந்திப் பாருங்கள். ஒரு கிராம் தேன் 3.15 கலோரி ஆற்றல் தருகிறது. இறைச்சி, முட்டை தரும் கலோரி அளவிது. பிரசவ வேதனை ஏற்படும்முன் 2 அவுன்ஸ் தேன் பருகினால் சுகப்பிரசவமாகும்.