சேப்பங்கிழங்கு தேன்குழல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F11%2Fzjnimu%2Fimages%2Fp58a.jpg&hash=b159adbe2106b00368c609a0e679b5bfacc5c44b)
தேவையானவை:
சேப்பங்கிழங்கு - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 10, அரிசி மாவு - 200 கிராம், பொட்டுக்கடலை மாவு - 200 கிராம், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சேப்பங்கிழங்கை வேக வைத்து தோலுரித்து காய்ந்த மிளகாய், தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த விழுதுடன் அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, சிறிதளவு உப்பு சேர்த்துப் பிசையவும். ஒரு கரண்டி எண்ணெயை சூடாக்கி மாவில் ஊற்றி கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, தேன் குழல் பிடியில் மாவைப் போட்டு பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.