FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on October 22, 2013, 09:39:20 PM

Title: ~ இஞ்சி... சுக்கு... கடுக்காய்--இய‌ற்கை வைத்தியம்:- ~
Post by: MysteRy on October 22, 2013, 09:39:20 PM
இஞ்சி... சுக்கு... கடுக்காய்--இய‌ற்கை வைத்தியம்:-

(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/1374366_627768787245440_387894511_n.jpg)

தினமும் காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, மாலையில் கடுக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் எந்த பிரச்சினையும் இல்லை என்று இன்றைக்கும் கிராமத்தில் பெரியவர்கள் கூறுவார்கள். அப்படி என்னதான் செய்கின்றன அவை?

சின்ன சின்ன துண்டுகளாக இஞ்சியை காலையில் சாப்பிடலாம். இல்லாவிட்டால் இஞ்சி சாறு எடுத்து, அஞ்சு நிமிஷம் அப்படியே வைத்தால் அடியில் வெள்ளையாக படியும். மேலே தெளிந்த சாறை மட்டும் குடித்தால் உடல் சுறுசுறுப்பாகும். வாய்வுத் தொல்லை, அஜீரணக்கோளாறு, சளித் தொல்லை எதுவும் எட்டிப் பார்க்காது.

பகலில் சுக்கு மல்லிக் காபி சாப்பிட்டு வந்தால் சளி, காய்ச்சல், இருமல், வாய்வுப் பிடிப்பு ஆகியவை நீங்கிவிடும். அதேபோல், ராத்திரியில் தூங்குவதற்கு முன்பாக கடுக்காய் சாப்பிடுவது நல்லது. இரண்டு, மூன்று கடுக்காயை இடித்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்சவும். அவை பாதியாக சுண்டிய பிறகு, நன்கு ஆற வைத்து குடிக்கவும். இப்படி தொடர்ந்து குடித்து வந்தால் மலச்சிக்கல், வாய்வுத் தொல்லை, மூலம் ஆகிய தொந்தரவுகள் குறையும்