FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on October 21, 2013, 03:00:35 PM

Title: ~ மறந்து போன மருத்துவ உணவுகள் ~
Post by: MysteRy on October 21, 2013, 03:00:35 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-96He9-lUKnU%2FUdKn8JKXFpI%2FAAAAAAAANkE%2FtgGWJ0h9TPk%2Fs1600%2F1.jpg&hash=6e1c36e8cb32455825a7490368c35035ebe7238a)

உணவுக் கலப்படம், செயற்கை வண்ணம்.... என தற்போது நாம் சமைத்துச் சாப்பிடும் உணவுகளில் பெரும்பாலானவை உடலுக்குத் தீங்கைத்தான் விளைவிக்கின்றன. உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் சில 'மறந்துபோன மருத்துவ உணவு’ வகைகள் இங்கே....


பிரண்டைத் துவையல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2012%2F04%2Fmdrlod%2Fimages%2Fp52a.jpg&hash=f23dc38ffc8965f84f4911c0e779b1652012e9e7)

தேவையானவை:
முற்றாத பிரண்டை - 50 கிராம், மிளகு - 20, பச்சை மிளகாய் - 3, உரித்த சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
முதலில் பிரண்டையில் உள்ள நாரை நீக்கி, நெய்விட்டு வதக்கவும். பிரண்டை நன்றாக வதங்கியதும் பிற பொருட்களையும் அதனுடன் சேர்த்து லேசாக வதக்கி, துவையலாக அரைக்கவும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்.

மருத்துவப் பயன்:
குடலில் உள்ள  கிருமி கள் நீங்கும். உடற்பருமன் குறையும். நரம் புத் தளர்ச்சி, எலும்புத் தேய்மானம் குண மாகும். மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும்.
Title: Re: ~ மறந்து போன மருத்துவ உணவுகள் ~
Post by: MysteRy on October 21, 2013, 03:02:17 PM
வெந்தயக் கீரை தோசை

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2012%2F04%2Fmdrlod%2Fimages%2Fp52b.jpg&hash=afdd27ced146d07381ae32990ca9a7046b4a0fab)

தேவையானவை:
தோசை மாவு - அரை கிலோ, சீரகம் - 25 கிராம், சோம்பு - அரை தேக்கரண்டி, பூண்டு - 4 பல், வெந்தயக் கீரை - 100 கிராம், எண்ணெய், உப்பு, மஞ்சள் தூள் - சிறிதளவு.

செய்முறை:
 சீரகம், சோம்பு, பொடியாக நறுக்கிய பூண்டு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கிக்கொள்ளவும். சூடு ஆறியதும் நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த விழுதுடன் உப்பு சேர்த்து தோசை மாவுடன் நன்றாகக் கலக்கி, தோசை வார்க்கவும். அதன் மேல் நறுக்கிய வெந்தயக் கீரையைத் தூவி, வெந்ததும் மறு பக்கம் திருப்பிப் போட்டு எடுக்கவும்.   

மருத்துவப் பயன்:
இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்தது. எலும்புகளைப் பலப்படுத்தும். வயிற்றுப் பூச்சிகளை அகற்றும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு.
Title: Re: ~ மறந்து போன மருத்துவ உணவுகள் ~
Post by: MysteRy on October 21, 2013, 03:04:20 PM
உளுந்துப் பொடி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2012%2F04%2Fmdrlod%2Fimages%2Fp53.jpg&hash=31ed2614ddf49cf92e70cecb9cfd395ff478f4b7)

தேவையானவை:
உளுத்தம் பருப்பு - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 10, சீரகம் - 5 கிராம், காய்ந்த கறிவேப்பிலை - 25 கிராம், ஓமம் - 10 கிராம், பெருங்காயம் - 5 கிராம்.

செய்முறை:
 அனைத்துப் பொருட்களையும் பொன்னிறமாக வறுத்துப் பொடியாக அரைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியை சாதத்தில் நெய் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.

மருத்துவப் பயன்:
உடல் மெலிவானவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு சிறந்த ஊட்டச் சத்து உணவு. சிசு வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களும் இதில் நிறைந்து இருப்பதால், கர்ப்பிணிகள் சாப்பிட ஏற்றது. கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.
Title: Re: ~ மறந்து போன மருத்துவ உணவுகள் ~
Post by: MysteRy on October 21, 2013, 03:06:32 PM
கறிவேப்பிலைக் கொழுக்கட்டை

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2012%2F04%2Fmdrlod%2Fimages%2Fp53a.jpg&hash=b5518349465f8a9c7eb00eecf3eb61bc4fcabe1a)

தேவையானவை:
 கறிவேப்பிலை - 2 கைப்பிடி, பச்சரிசி மாவு - கால் கிலோ, கருப்பட்டி - 100 கிராம், சீரகம், மிளகு - தலா அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி, ஏலக்காய் - 6, சுக்கு - ஒரு துண்டு, தேங்காய் - அரை மூடி.

செய்முறை:
சீரகம், மஞ்சள் தூள், மிளகு, சுக்கு ஆகியவற்றை வெறும் வாணலியில் இளஞ்சிவப்பாக வறுத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். தேங்காயைத் துருவிக்கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும். கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கருப்பட்டியைப் பாகு காய்ச்சி, மற்ற பொருட்களுடன் சேர்த்து பச்சரிசி மாவில் கலக்கவும். பின்னர் கொழுக்கட்டையாகப் பிடித்து இட்லித் தட்டில் வேகவைத்து எடுக்கவும்.

மருத்துவப் பயன்:
சர்க்கரை நோய், எலும்புத் தேய்மானம், தைராய்டு பிரச்னைகளுக்குக் கை கண்ட மருந்து. உடல் பலவீனம், வலி, அசதி, சோர்வை நீக்கி சுறுசுறுப்பு தரும். ஆவியில் வேகவைத்து எடுப்பதால், எளிதில் ஜீரணமாகும்.