ரசித்ததில் ஒன்று.(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffarm8.staticflickr.com%2F7365%2F10391588533_4677786701_m.jpg&hash=a410e9f96eacc9809b646527916cbc4b6e0d15bd)
அதிகாலை எழுந்ததும்
ஆசை முகத்துடன்
ஓசை நயம் கண்டு
ஒய்யாரமாய் நடைநடந்து
வாசல் வெளியில் சென்று
வண்ண வண்ண
வான வெடிகளை
பார்த்தபடியே
கொஞ்சும் மழலை
முகத்துடன்
முகம் நோக்கின் தாயின்
வாய்மொழியில்
தலைமுதல் பாதம்வரை
தழுவிடும்
மூவண்ண எண்ணையில்
முத்து குளியல் கண்டு
முழுமுதற் கடவுளின்
வரம் பல கொண்டு
புத்தாடை மேனியிலே
புதுபுது ரகத்துடன்
அணிகலன்கள் பூட்டி
அன்னையின் ஆசிர்வாதத்துடன்
இனிப்புகள் உண்டு
வெடிக்கு வெடி சத்தத்தில்
வெள்ளை மனதும்
கொள்ளை கொள்ளும்
இரவில்
மனதில் இருக்கும்
இருட்டை விலக்கி
வெளிச்சம் கொண்டு
வாழ்வதே தீபாவளி திருநாள் (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffarm6.staticflickr.com%2F5508%2F10391537213_2da745d682_o.gif&hash=e96c238a0524a7446d5ba4a6bebdff1f9d2d8d36)
அசுரன் அழிந்து
ஆனந்தம் கிடைத்ததை போல
நம் வாழ்வில் உள்ள
எல்லா தடை கற்களும்
படிகற்களாக மாறி
துன்பங்கள் நீங்கி இன்பங்கள் மலர
என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffarm8.staticflickr.com%2F7400%2F10391538643_f01519ddbf_o.gif&hash=2a58f39af88b5d8a874d0398e79c80f0db78ce90)
ஐப்பசி மாதத்தில் அடைமழையுடன்
பெரும் மகிழ்ச்சியாய் வரும்
என் இனிய தீபாவளியே
நீ வரும் நாளில் நான் விரும்பி கேட்பது ....
இயந்திர வாழ்க்கையை தள்ளி வைத்து
குடும்பத்தோடு கூடி மகிழசொல் .
முதியோரை தனியாய் ஒதுக்காமல்
தகுந்த பாசத்தையும் கவனிப்பையும் கொடுத்து
அவர்களின் அன்பையும் ஆசியையும் பெற சொல் ...
கணவனை பாடாய் படுத்தி பட்டு எடுத்தாலும் சரி
பாதி தள்ளுபடியில் அவனுக்கு ஒரு அரை கை
சட்டை எடுத்தாலும் சரி விட்டுகொடுத்து
மனம் கோணாமல் உடுத்த சொல் ...
தங்களின் விருப்பத்தை சொல்லி
பெற்றவர்களின் போனசுக்கு வேட்டுவைத்து
வாங்கிய பொருளை மற்ற பிள்ளைகளோடு
பகிர்ந்து விளையாட சொல் ....
அழகிய வண்ணங்களை ஒருங்காய் இணைத்து
அழகாய் இருக்கும் பூமியை கந்தக புகையில்
கசக்காமல் சுற்றுபுறத்தை மாசுபடுத்தாமல்
அப்படியே அடுத்த தலைமுறைக்காக
விட்டு வைக்க சொல் ...
இன்றைய பொழுதாவது வாடிய
வயிறில்லாமல் இருக்க செய் .
மகிழ்ச்சியோடு உணவையும் பகிர்ந்து
இல்லாதவன் என்ற வார்த்தையை
இல்லாமல் செய்ய சொல் ...
ஆணவ போதையில் மிதக்காமல்
சாலைவிதியை மதித்து விபத்து
இல்லாமல் காளையரை
மகிழ்ச்சியோடு கொண்டாட சொல் ...
எவ்வளவு தான் பெண்ணியம் பேசினாலும்
சம உரிமை கிடைத்த பாடு இல்லை
சத்தம் போடாமல் சட்டம் போட்டு
வஞ்சகனை வதம் செய்ய சொல் ...
ஒரு அசுரனை வதைததை மகிழ்வாய்
கொண்டாடும் மக்களை ஒன்றும் அறியாத
பிஞ்சை நசுக்கி கொள்ளும் அரக்கனை
தேடி தேடி வதம் பண்ண சொல் ...
இது எல்லாம் ஒரு நாள் சாத்தியமானால்
இனிதாய் நடந்தால்
நம் வாழ்வில் தினம் தினம்
தீபாவளி தான் ....
தீயவனின் பிடியில் சிக்கி
இருள் அடைந்த மக்களின் வாழ்கையை!
பகவான் ஸ்ரீ கிருஷ்ணன்
ஒளிமயமாய் மாற்றி பகைவனின்
விருப்பத்திற்கு இணங்க கொண்டாப்படும்
நாள் தீபாவளி !
வெற்றி வீரனாய் வீடு சென்றதும்
இனிப்பு கொடுத்து உபசரித்த
மகிழ்ச்சியில் தான் மட்டும் அல்லாமல்
தன் உலகத்தையே சந்தோஷத்தில்
உறையவைத்த நாள் இந்த நாள் !
ஒளிமயமான வாழ்க்கை தொங்கிய நாளை
ஒவ்வொரு வீட்டிலும் புத்தாடை உடுத்தி
புது புது வர்ணங்கள் பூசி
புன்னகையுடன் ஒருவர்க்கொருவர்
இனிப்பு பண்டங்களை பாசத்தோடு
பரிமாறிகொல்லும் நாள்
இந்த இன்னிய நாள் !
உள்ளம் அடைந்த சந்தோசத்தினை
உலகத்திற்கு தெரியவைக்கவே
பல வகையான பட்டாசுகளை
வெடித்து மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும்
நாள் இன்றைய நாள் !
அனைவர்க்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் !