FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on November 14, 2011, 10:13:04 AM
-
என் செல்லமே!
தினமும் கனவில்
உன்னோடு
தான் வாழ்கிறேன்....
என்னை பாடாய்
படுத்துகிறாய் நீ.....
உன்னை
கொஞ்சி கொஞ்சி
மகிழ்கிறேன்....
உன் இனிய பேச்சால்
என் அகம்
மகிழ வைக்கிறாய்......
உன் செல்ல முத்தம்
தேனாய் இனிக்கிறது....
இப்படியே
இறந்து விடவா
என் செல்லமே!!!!
கனவிலாவது
உன் தாயாக...
இருக்க முடிகிறதே!!!!!
உன்னை பத்து மாதம்
சுமக்க ஆசை தான் எனக்கு.....
உன் பிஞ்சு கால்
என்னை உதைக்கும்
அந்த ஒரு நொடி போதும்
என் செல்லமே
இந்த மலடி
பட்ட காயத்திற்கு
பெரிய மருந்து....
உன்னால் நான் மயக்கம்
அடைவது எப்போது....
உன் வருகைக்காக
நான் தேதி கிழிப்பது எப்போது?????
உனக்காக ஆயிரம் பெயர்கள்...
தயாராக இருக்க
நான் தாயாகும்
நாள் எப்போது??
என் துயர தீயை
உன் எச்சினால்
துடைத்திடு....
என் வாழ்வை
முழுமையாக்க
என் செல்லமே!
சீக்கிரம்
என் கருவில்
வந்திடு.....
-
கனவிலாவது
உன் தாயாக...
இருக்க முடிகிறதே!!!!!
nalle varigal shruthi nice
-
nice kavithai :)
-
nice kavithai :)
கனவிலாவது
உன் தாயாக...
இருக்க முடிகிறதே!!!!!
nalle varigal shruthi nice
thankssssssssssss