FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on October 20, 2013, 07:14:16 PM

Title: ~ குழந்தைகளுக்கு மார்பில் பால் கட்டுதல் ஏற்பட்டால் அதை நீக்குவதற்கான்.... ~
Post by: MysteRy on October 20, 2013, 07:14:16 PM
குழந்தைகளுக்கு மார்பில் பால் கட்டுதல் ஏற்பட்டால் அதை நீக்குவதற்கான் வழிமுறைகள் :-

(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-frc3/1375121_626745114014474_1927601754_n.jpg)

மார்பில் பால் சுட்டிக்கொள்வதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், நுண்கிருமிகள் பரவி, மார்பு சிவந்து வீங்கிவிடும். இதை உடனே சரி செய்ய வேண்டும். இல்லையென்றால், மார்பில் சீழ்க்கட்டி உருவாகி, அறுவைச் சிகிச்சை வரை செல்ல நேரிடும்.
சரியான முறையில் வைத்து குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டும்.
பால் அதிகமாக இருந்தாலோ அல்லது குழந்தை சரியாகக் குடிக்காமல் பால் கட்டிக் கொண்டாலோ பாலைக் கரைத்து வெளியேற்ற வேண்டும்.

கவனிக்க வேண்டியவை

1. குழந்தை பசிக்கு அழும்போதுதான் பால் கொடுக்க வேண்டும்.

2. பால் கொடுத்தவுடன் வயிற்றில் உள்ள காற்றை (பால் குடிக்கும்போது விழுங்கியது) வெளியேற்றுவதற்கு, குழந்தையைத் தோளில் போட்டு முதுகை லேசாகத் தட்ட வேண்டும்.

3. ஏப்பம் விட்ட பிறகு, குழந்தையை வலதுபுறமாக ஒருக்களித்துப் படுக்கவைக்க வேண்டும்.

4. பால் குடித்த பிறகு, 1 முதல் 2 மணி நேரத்துக்கு நன்கு தூங்குவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, மஞ்சள் நிறத்தில் 1 முதல் 6 தடவை மலம் கழிப்பது, சீராக எடை கூடுவது போன்றவை. குழந்தைக்குத் தேவையான அளவு சத்துள்ள உணவு (தாய்ப்பால்) கிடைப்பதை உறுதி செய்கிறது.