FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on November 14, 2011, 09:58:56 AM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi225.photobucket.com%2Falbums%2Fdd86%2FAAZ123_07%2Fanime%2520couples%2Fhug.jpg&hash=c64ca95af61ef8aa14a587d7add3cc8034824cc6)
நாள் முழுதும் பேசினாலும்
தீருவது இல்லை ஆசை.....
தினமும் வெட்கப்பட்டு
இனி வெட்கம் மறந்து விடுமோ?
உன்னை காணும் ஒரு நொடியில்
ஆயிரம் கனவுகள் என் கண்ணில்
கண்ணை திறந்தே கனவு காண
என்னால் மட்டுமே முடிகிறதோ....
செல்லமாய் கை உரசி போகும்
ஸ்பரிசம்...
இதமான பார்வை....
நெஞ்சில் என்றும் நீங்காத
உன் வார்த்தைகள்....
போதும் வாழ்நாள் முழுதும்.....
என் உயிரில் உறைந்த
உனக்காய் வாழ்வது
உயிரோடு சாவது போல் என்றாலும்
சுகமாய் போனது இன்று...
உடல் வருத்தம் வருகையில்
உன் கனிவு பார்வை...
செல்லமாய் நெற்றியில்
ஒரு முத்தம்...
மீண்டும் வேண்டும் உடல் வருத்தம்
ஏங்குது என் உள்ளம்...
உன்னிடம் சொன்னால்
நீ செல்லமாய் வைக்கும் அடிக்கூட
அரவணைப்பாய் நினைக்குது
என் மனம்.....
நெருங்கி நீ வருகையில்
விலகி நான் செல்வதால்
நொறுங்கி போவதாக
நீ சொல்லும் சொல் கூட
ரசிக்கிறேன் நான்......
என்னை தேடும் உன்னை
தேட வைப்பதில் சுகம் என்பேன்...
என்னை காக்க வைப்பதில்
சுகம் என்பாய் நீ....
ஒருவரை ஒருவர் ரசிக்கிறோம்
ரகசியமாய்....
வாழ்நாள் முழுதும் வேண்டும்
இந்த தேடுதல்...காத்தல்...ரசித்தல்....
பேராசையாய் போனது என் உள்ளம்....
கண்ணீரோடு வாழும்
காலம் வந்தாலும்
உன் நினைவுகள் போதும்
என் கண்ணீரை துடைக்க....
-
உடல் வருத்தம் வருகையில்
உன் கனிவு பார்வை...
செல்லமாய் நெற்றியில்
ஒரு முத்தம்...
nesamane varigal shruthi
-
என் உயிரில் உறைந்த
உனக்காய் வாழ்வது
உயிரோடு சாவது போல் என்றாலும்
சுகமாய் போனது இன்று...
nice ;)
-
என் உயிரில் உறைந்த
உனக்காய் வாழ்வது
உயிரோடு சாவது போல் என்றாலும்
சுகமாய் போனது இன்று...
nice ;)
உடல் வருத்தம் வருகையில்
உன் கனிவு பார்வை...
செல்லமாய் நெற்றியில்
ஒரு முத்தம்...
nesamane varigal shruthi
Thanksssss rose and micro