FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on November 14, 2011, 09:53:33 AM
-
நம்பிக்கை இல்லா உலகம்
நம்பாத மனிதர்கள்.....
நட்புகள் எல்லாம் உண்டு
நம்பிக்கை இல்லா
நட்பும் உண்டு...
நம்புவது நம் குற்றம்....
நட்புகள் எல்லாம் பொய்யோ???
நட்பு வேண்டாம் இனி...
நரகமான தனிமை போதும்
நலம் விசாரிக்க சில உறவுகள்......
நட்போடு இருந்தால் போதும்....
நல்லது இனிதே வந்தே சேரும்......
நட்பில் பொய் சொல்லும் பழக்கம்.,
நட்பில் ஒளிவு மறைவு.,
நாம் செய்தால் அது
நட்பே அல்ல...
நல்ல நட்புக்கு..அது அழகும் இல்லை......
நஞ்சாய் வார்த்தைகள்,
நாம் கண்டு கொள்ளலாம் சில
நட்பில்.....
நாள்கள் பல ஓடின....
நட்பில் சிலவும் காணாமல் போயின.....
நல்லவர்களாய் இருந்தோம்
நட்பாய் இருந்தபோது.....
நட்பு போனபின் உணர்வோம்
நல்ல நட்பு எது என்று.....
நட்பு போனபின்
நட்பை பழிப்பது
நம் கண்ணை
நாமே குத்தி கொள்வது போலாகும்..
நலமாய் நட்பு கொண்டால்
நலமாய் பிரிந்து விடுங்கள்....
நட்பை பழிக்காதீர்கள்.........
-
arumaiana kavithai varigal shruthi ounge kavithai yellame rembe super
-
நட்பாக பழகி
நட்பு நமக்கு
நன்று இல்லாவிட்டால்
நட்பை பழிப்பது
நமகொன்றும்புதுசு இலையே
நாமும் கொஞ்சம்
திரும்பி பார்க்கலாம்
நாம் நடந்து வந்த பாதையை ..
-
நட்பாக பழகி
நட்பு நமக்கு
நன்று இல்லாவிட்டால்
நட்பை பழிப்பது
நமகொன்றும்புதுசு இலையே
நாமும் கொஞ்சம்
திரும்பி பார்க்கலாம்
நாம் நடந்து வந்த பாதையை ..
arumaiana kavithai varigal shruthi ounge kavithai yellame rembe super
rose nice one...
micro thanks