FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on November 14, 2011, 09:50:46 AM

Title: ஒரு நாள் கூத்து தான்
Post by: ஸ்ருதி on November 14, 2011, 09:50:46 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.hindu.com%2F2006%2F02%2F06%2Fimages%2F2006020609490601.jpg&hash=23686a143f910d9818c3abb25e67ed230a0b5c01)

பள்ளம் எல்லாம் மேடாச்சு
தெருவெல்லாம் சுத்தம் ஆச்சு...
இரவொடு இரவாக
புது ரோடு போட்டாச்சு...
வெள்ளைத்தூள் தூவியாச்சு...
வீதி இப்போ பளபளப்பாச்சு
மின்னாமல் தெரு விளக்கு
புதுசா எரிய துவங்கியாச்சு....
பிரியாணி சாப்பாடு தயாராச்சு...
கூட்டமும் அதிகமா கூடியாச்சு....
ஒரு நாள் கூத்து தான்...
என்றாலும்
எங்கள் மனம் ஏங்கியாச்சு....
எங்க சேரிப் பக்கம்
மந்திரி வந்தால்
ஒரு நாள் சந்தோஷமாவது
எங்களுக்கும் கிடைக்குமே.....
சுத்தமாக எங்கள் தெருவை
பார்த்து பல வருடம் ஆச்சு...
ஏம்பா.. மந்திரி...
எங்கள் சேரிப்பக்கமும்
கொஞ்சம் வந்து போய்யேம்பா... :P :P :P
Title: Re: ஒரு நாள் கூத்து தான்
Post by: micro diary on November 16, 2011, 03:25:07 PM
nalle karpanai shruthi ounge karpanaike thalai vangire
Title: Re: ஒரு நாள் கூத்து தான்
Post by: Global Angel on November 16, 2011, 04:11:32 PM
nice  ;)
Title: Re: ஒரு நாள் கூத்து தான்
Post by: ஸ்ருதி on November 16, 2011, 08:20:00 PM
haha thanks Micro and rose:D