FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on October 18, 2013, 10:53:56 AM

Title: பீர்கங்காய் தோல் சட்னி
Post by: kanmani on October 18, 2013, 10:53:56 AM
பீர்கங்காய் தோல்  சட்னி  செய்வதற்கான சமையல் குறிப்பு.

தேவையான பொருட்கள்

    பீர்கங்காய்  – 2
    வரமிளகாய்  – 2
    உளுத்தம்பருப்பு  – 1 தேக்கரண்டி
    கடலைபருப்பு  – 1 தேக்கரண்டி
    புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
    தேங்காய் – 1 தேக்கரண்டி(விருப்பதிற்கேற்ப)

செய்முறை

    பீர்கங்காய் தோல் சீவி தோலை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
    கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, வரமிளகாய்,பீர்கங்காய் தோல், புளி ஆகியவற்றை பச்சை வாசனை
    போகும் வரை வதக்கவும்.
    பிறகு தேங்காய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
    வதக்கியவற்றுடன் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

குறிப்பு
இந்த சட்னி சாதத்துடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.