FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on November 14, 2011, 09:45:38 AM

Title: உன்னோடு வாழ்ந்தால்..
Post by: ஸ்ருதி on November 14, 2011, 09:45:38 AM
உன்னோடு வாழ்ந்தால்
அவ் வாழ்க்கை மட்டும் தான் நிஜம்...
வாழ இயலா நிலை...
வாழ துடிக்கும் மனது....
தினமும் வாழ்கிறேன் கனவில்.......

தலையணை மந்திரம்
அறிந்தேன் நான்....
தலையணையாய் நீ
தூங்க முடியாமல் நான்....
என்ன மந்திரம் போட்டாய்........

என் பெயரை
நொடிக்கு ஒரு முறை
நீ அழைக்கிறாய்.....
ஒவ்வொருமுறையும்
செத்து செத்து பிழைக்கிறேன்
உன் குரலின் வசியத்தால்...........

இதயம் கனக்கிறது
உன்னை தாங்க இயலவில்லை
என் இதயத்தால்....

நான் பேசும் வார்த்தைகளை
நீ ரசிப்பாய் என்றாய்
இப்போது வார்த்தைகள் தேடி அலைகிறேன்
வெட்கத்தால்....
மீண்டும் அவ் வார்த்தைகளை
பேச இயலாமல்........

Title: Re: உன்னோடு வாழ்ந்தால்..
Post by: Global Angel on November 16, 2011, 04:27:26 PM
Quote
நான் பேசும் வார்த்தைகளை
நீ ரசிப்பாய் என்றாய்
இப்போது வார்த்தைகள் தேடி அலைகிறேன்

nice shuru ;)
Title: Re: உன்னோடு வாழ்ந்தால்..
Post by: ஸ்ருதி on November 16, 2011, 08:08:01 PM
Quote
நான் பேசும் வார்த்தைகளை
நீ ரசிப்பாய் என்றாய்
இப்போது வார்த்தைகள் தேடி அலைகிறேன்

nice shuru ;)

thanks di  ;) ;) ;)