FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on October 18, 2013, 10:07:38 AM
-
சுவையான முள்ளங்கி பராத்தா செய்வதற்கான விரிவான செய்முறை குறிப்பு.
தேவையான பொருட்கள்
முள்ளங்கி – 2
கோதுமை மாவு – 1 கப்
அம்ச்சூர் தூள் – 1 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 /2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 /2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
மல்லித்தழை – 3 கொத்து
எண்ணெய்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முள்ளங்கியை தோல் சீவி, துருவிக் கொள்ளவும்.
துருவிய முள்ளங்கியுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், அம்ச்சூர் தூள், சீரகத்தூள், மல்லித்தழை சேர்த்து நன்கு கலந்து, பிழிந்து தண்ணீரை மட்டும் தனியே எடுத்து விடவும்.
கோதுமை மாவுடன் முள்ளங்கி பிழிந்தெடுத்த தண்ணீர், எண்ணெய், மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். சப்பாத்தி மாவை 15 நிமிடத்திற்கு அப்படியே வைக்கவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை மீண்டும் லேசாக பிசைந்து கொண்டு, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
உருண்டையை வர மாவில் தோய்த்து சப்பாத்தி கட்டையை பயன்படுத்தி 4 ” அளவு தடிமனாக உருட்டிக் கொள்ளவும்.
1 – 2 மேசைக்கரண்டி அளவு முள்ளங்கி
கலவையை தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியின் நடுவில் வைத்து ஓரங்களை சுற்றிலும் மூடவும். இதனை மீண்டும் சப்பாத்தி கட்டையை பயன்படுத்தி 1 /2 அளவு தடிமனான சப்பாத்தியாக தேய்த்துக் கொள்ளவும்.தேய்க்கும்போது வர மாவு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதே போல் மற்ற உருண்டைகளையும் தேய்த்துக் கொள்ளவும்.
சப்பாத்தி கல்லை சூடு செய்து, மிதமான சூட்டில் வைத்துக் கொள்ளவும்.
கல் சூடானதும், பராத்தாவை அதில் போட்டு இரண்டு புறமும் பிரவுன் கலராகும் வரை வேக விட்டு எடுக்கவும். விருப்பமெனில் பராத்தாவின் மேல் நெய் அல்லது எண்ணெய் தடவிக் கொள்ளலம்.
மற்றொரு முறை
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி துருவிய முள்ளங்கி, மிளகாய்த்தூள், சீரகத்தூள், அம்ச்சூர் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
கோதுமை மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். சம அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டையை பயன்படுத்தி 2.5 இன்ச் தடிமனான சப்பாத்தியாக உருட்டிக் கொள்ளவும்.
மற்றொரு உருண்டையை எடுத்து அதே அளவு தட்டையாக உருட்டிக் கொள்ளவும்.
தேய்த்த சப்பாத்தியில் இரு சப்பாத்தியை அடியில் வைத்து அதன் மேல் 1 1/2 தேக்கரண்டி முள்ளங்கி கறியை வைத்து சமமாக பரப்பவும். சப்பாத்தியின் ஓரங்களை லேசாக தண்ணீரால் தடவி விடவும்.
அதன் மேல் தேய்த்து வைத்துள்ள மற்றொரு சப்பாத்தியை வைத்து ஓரங்களை அமிழ்த்தி இரண்டு சப்பாத்தியையும் சேர்த்து நன்றாக ஒட்டி விடவும்.
அதனை சப்பாத்தி கட்டையை வைத்து 5 இன்ச் அளவு தடிமனான சப்பாத்தியாக உருட்டிக் கொள்ளவும்.
சப்பாத்தி கல்லை சூடு செய்து, மிதமான சூட்டில் வைத்துக் கொள்ளவும்.
கல் சூடானதும், பராத்தாவை அதில் போட்டு இரண்டு புறமும் பிரவுன் கலராகும் வரை வேக விட்டு எடுக்கவும். விருப்பமெனில் பராத்தாவின் மேல் நெய் அல்லது எண்ணெய் தடவிக் கொள்ளலம்.
தயிர் அல்லது ரைத்தாவுடன் பரிமாறவும்.