FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on October 16, 2013, 09:01:50 PM
-
என்னென்ன தேவை?
மைதா மாவு - 2 கப்,
பால் - அரை கப்,
தயிர் - கால் கப்,
ஈஸ்ட் - ஒன்றரை டீஸ்பூன் (பொரி கடையில் கிடைக்கும்) சர்க்கரை - ஒரு டீஸ்பூன்,
வெண்ணெய், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
பாலை வெதுவெதுப்பாக சூடாக்கி அதில் சிறிது ஈஸ்ட், சர்க்கரை சேர்த்து கலந்து மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து சிறிது பொங்கி வரும்போது தயிரை சேர்த்து கலக்கி மீண்டும் 10 நிமிடம் கழித்து நுரைத்து பொங்கி வரும்போது ஈஸ்ட், மைதா கலவை சேர்த்து இறக்கவும். அத்துடன் வெண்ணெய், உப்பு சேர்த்து மிருதுவாகப் பிசையவும். இந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு கதகதப்பாக உள்ள இடத்தில் மூடி வைக்கவும்.
பின் அதைப் பார்க்கும்போது இரண்டு மடங்காக உப்பி இருக்க வேண்டும். அப்போத சிறிதளவு மாவை எடுத்து நாண் போல் (ரொட்டி மாதிரி) தேய்க்கவும். ஒரு தோசைக்கல்லில் தண்ணீர் தெளித்து நாணை போட்டு இருபுறமும் திருப்பி போட்டு பின் ரொட்டி வலையில் நேரடியாக மிதமான தீயில் காட்டவும். அதேபோல் இருபுறமும் செய்து எடுத்து வெண்ணெய் தடவி சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு: நாண் செய்வதற்கு தோசைக் கல்லை நன்கு சூடாக்கி அதன் மேல் சிறிது தண்ணீர் தெளித்து உடனே நாணை அதன் மேல் போட்டு தோசைக்கல்லை அடிப்பக்கமாக திருப்பவும். சில நொடிகளில் நாண் தணலின் மேல் விழும். அதை இரு புறமும் வாட்டி பரிமாறலாம்.