வெண்டைக்காய் தோசை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2009%2Fjun%2F19062009%2Fp60b.jpg&hash=cb4d348cac5ee1fb9eb0e2c29da429c720881aa7)
தேவையானவை:
வெண்டைக்காய் - 150 கிராம், புழுங்கலரிசி - ஒரு கப், பச்சை மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சித் துண்டு, கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, பூண்டு - 4 பல், சின்ன வெங்காயம் - 15, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
புழுங்கலரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசி, வெண்டைக்காய், இஞ்சி, பூண்டு, உப்பு, பச்சை மிளகாயை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அரைத்த மாவில் சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு, கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். தோசை மாவு கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். தோசைக் கல்லை காயவைத்து, மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
தேங்காய் சட்னி இதற்குப் பொருத்தமாக இருக்கும்.