FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on November 14, 2011, 09:19:52 AM

Title: வேண்டாம் இந்த நிலை...
Post by: ஸ்ருதி on November 14, 2011, 09:19:52 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi301.photobucket.com%2Falbums%2Fnn50%2Fsheilasultani%2Fbigstockphoto_Divorce_Hurts_2624-1.jpg&hash=74fdf3a9f90fda9d305610e152326b102da6c3f6)

கீழே விழுந்தேன்
ஓடி வந்து அணைத்தாள் அம்மா...
என்னை மட்டுமே சுற்றியது
அவள் பார்வை..

ஆசையாய் தோளில்
அமர்ந்து ஆடிப் பாடி
திரிந்தேன் அப்பாவின்
அரவணைப்பில்....

யார் செல்லம் நீ
என்று கேட்டபோது
உன் செல்லம் நான்
என்றேன்..

ஒருவர் மாற்றி ஒருவருக்கு
சொல்லும் போதும்
பாசத்தில் மகிழ்ந்து
முத்தம் தந்தனர்
புரியாத வயதில்
இனிப்பாய் இருந்தது...

ஒவ்வொரு நிமிடமும்
ஆனந்தம் எங்களுக்குள்...
இன்றும் புரியவில்லை
எங்கள் ஆனந்தம் எங்கு போனது
என்று???

அன்னையும் தந்தையும்
பிரிந்து விட்டதாக சொல்லும்
உறவுகள்...
வாரம் ஒருவரிடம் என்று
என்னை பந்தாடினர்
இருவரும்....

இன்றும் கேட்டனர்
யார் செல்லம் நீ என்று???
இன்று சொல்ல தெரியவில்லை
யார் செல்லம் நான் என்று????

என்னை பங்கு போட்டனர்..
பாசத்தைபங்கிட்டு
கொடுக்க முடியவில்லை என்னால் ...
அங்கும் இங்கும் அநாதையாக
அலைவது போல் தவிக்குது
நெஞ்சம்...

உங்களால் முறிவது
உங்கள் திருமண பந்தம் மட்டுமா???
எங்கள் பாசமும்
எங்கள் எதிர்காலமும் தான்!!!

விகாரத்தில் ரத்து
உங்கள் உறவு மட்டுமா?
உங்களுடன் உண்டான
எங்கள் உறவையும் சேர்த்து
ரத்து செய்கின்றீர்கள்...

வேண்டாம் இந்த நிலை...
கோடி கோடியாய்
கொட்டினாலும்
நாங்கள் வேண்டுவது
தாய் தந்தையின் அரவணைப்பு தான்..

பெற்றோர் இருந்தும்
அநாதையாக நிற்கும் நிலை
எங்களுக்கு வேண்டாம்....
Title: Re: வேண்டாம் இந்த நிலை...
Post by: Global Angel on November 16, 2011, 04:33:32 PM
ullaththai urukkum kavithai nanru ;)
Title: Re: வேண்டாம் இந்த நிலை...
Post by: micro diary on November 16, 2011, 04:52:38 PM
nalle kavithai shruthi  oru kulathain mane nilaiye arumaiye soli eruke shruthi
Title: Re: வேண்டாம் இந்த நிலை...
Post by: ஸ்ருதி on November 16, 2011, 07:59:54 PM
nalle kavithai shruthi  oru kulathain mane nilaiye arumaiye soli eruke shruthi
ullaththai urukkum kavithai nanru ;)


thanksssssssssss