நூடுல்ஸ் பாயசம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F07%2Fywqmdd%2Fimages%2Fp54.jpg&hash=99cf168150d9c4dbe98bed36bb55635a66b9dca4)
தேவையானவை:
அரிசி மாவு - ஒரு கப், பால் - 2 கப், தேங்காய் துருவல் - அரை கப், வெல்லம் - ஒரு கப், ஏலக்காய் - 4, நெய் - 4 டீஸ்பூன்.
செய்முறை:
ஒன்றரை கப் நீரை சூடாக்கி, அதில் நெய்யை விடவும். பிறகு, அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கொழுக்கட்டைக்கு கிளறுவது போல கிளறி ஆறவிடவும்.
தேங்காய் துருவல், ஏலக்காய், வெல்லம் சேர்த்து அரைக்கவும். பாலை கொதிக்க விட்டு அரைத்த விழுதை சேர்த்துக் கலக்கவும். ஆறிய அரிசி மாவை நன்றாகப் பிசைந்து, தேன் குழல் அச்சில் போட்டு, கொதிக்கும் பாலில் பிழிந்து கிளறி இறக்கவும் (அதிகம் கிளற வேண்டாம்).
நூடுல்ஸ் பாயசம்:
சிறிதளவு மில்க்மெய்ட் சேர்த்து செய்தால்... மேலும் சுவையாக இருக்கும்.