FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: MysteRy on October 14, 2013, 02:06:39 PM

Title: ~ கணினியில் உள்ள வன் பொருட்களின் தகவலை அறிந்துகொள்ள ~
Post by: MysteRy on October 14, 2013, 02:06:39 PM
கணினியில் உள்ள வன் பொருட்களின் தகவலை அறிந்துகொள்ள

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-dzbbqC9crLA%2FUabaSKrB7nI%2FAAAAAAAAAPg%2FBHTWb0B_bkg%2Fs320%2Fhardware-freak-00-kerodicas.jpg&hash=a52c96bfc2aca460282d008654c61fdafec81aed)


புதியதாக கணணி வாங்கியவர்கள் அதில் உள்ள வன்பொருள் சாதனங்களை கண்டு மிரட்சியடைவார்கள்.
சிபியு, மதர்போர்ட், ராம், கிராப்பிக்ஸ், சவுண்ட்கார்ட், ஓபரேடிங் சிஸ்டம், மவுஸ், கீ-போர்ட், நெட் ஒர்கிங், பிரிண்டர் என விதவிதமான பெயர்கள் கேட்டு ஆச்சர்யமடைவார்கள்.
ஒவ்வொன்றின் விவரங்களையும் எளிதில் அறிந்துகொள்ள இந்த சின்ன மென்பொருள் உதவுகின்றது. 916 கே.பி அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
இந்த மென்பொருளை நிறுவியதும் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் 5 விதமான பகுதிகள் இருக்கும். இதில் உள்ள Start கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் சிபியு, மதர்போர்ட், பயாஸ் போன்ற விவரங்கள் கிடைக்கும்.
அடுத்த லெவல் செல்ல உங்களுக்கு ராம் மெமரி விவரங்களும் அடுத்த லெவலில் உங்கள் கணணியில் உள்ள வீடியோ காரட், சவுண்ட் காரட்மற்றும் ஸ்டோரெஜ் டிவைஸ் போன்ற விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
அடுத்த லெவலில் உங்களுக்கு உங்கள் கணணியில் நீங்கள் நிறுவியுள்ள ஓபரேடிங் சிஸ்டம், ஆப்டிகல் மீடியா, கீபோர்ட் மற்றும் மவுஸ் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

 தரவிறக்க சுட்டி (http://www.4shared.com/file/0OXrnDRh/HardwareFreak.html)