செம்பருத்திப் பூ பருப்புக் கஞ்சி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2012%2F05%2Fzmziyt%2Fimages%2Fp31.jpg&hash=a8c7a82b2ed96e78f1747d41cfa26e6f3a5dfbc0)
தேவையானவை:
பச்சரிசி - கால் கிலோ, பாசிப் பருப்பு - 100 கிராம், வெள்ளை மிளகு, சீரகம் - தலா ஒரு டீ ஸ்பூன், பூண்டு - 4 பல், மஞ்சள் தூள் - அரை டீ ஸ்பூன், ஒற்றைச் செம்பருத்தி - 6, நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கு ஏற்ற அளவு.
செய்முறை:
பாசிப் பருப்பை வேகவைத்துத் தனியாக எடுத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, ஒன்றிரண்டாகத் தட்டிய மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தூள் ஆகியவற்றைப் போட்டு லேசாக வதக்கவும். அதில் தேவையான அளவுக்குத் தண்ணீர் ஊற்றி, பச்சரிசியைக் கொட்டி வேகவிடவும். முதல் கொதி வந்ததும் வேகவைத்த பாசிப் பருப்பை அதனுடன் சேர்த்துக் கொதிக்கவிடவும். கஞ்சிப் பதம் வந்ததும் உப்பு, சிறியதாக நறுக்கிய செம்பருத்திப் பூ ஆகியவற்றைப் போட்டுக் கீழே இறக்கவும்.
மருத்துவப் பயன்: இது இதயத்தை வலுப்படுத்தும் வல்லமைகொண்டது. ரத்த அழுத்தத்தைச் சம நிலையில் வைத்து இருக்கும். உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்பைக் குறைக்கும். கருப்பை சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும். உடல் உஷ்ணத்தைப் போக்கிக் குளிர்ச்சி தரும்.