FTC Forum
Entertainment => Love & Love Only => Topic started by: Global Angel on November 14, 2011, 04:37:11 AM
-
யாருக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்கை அமையும்?
இந்த காலத்துல பல பேருக்கு திருமணம் நடக்கிறதே குதிர கொம்பா இருக்கு. அப்படியே நடந்தாலும் அதில் பல பேருக்கு அந்த அளவுக்கு மகிழ்ச்சி கிடைப்பதில்லை. ஏன் என்றால் திருமணம் எனபதே "அந்த" சுகத்த அனுபவிக்க தான் என்ற மன நிலை பல பேருக்கு இருக்கு. கொஞ்சம் நாள் "அந்த" சுகத்தினால் வண்டி நல்லா ஓடும். (சிலருக்கு முதல் நாளே ஏமாற்றம் தான்.."அது" அப்படி இருக்கும் "இது " இப்படி இருக்கும் என்ற அதீத கற்பனைகளால். ஏப்படி இருந்தாலும் பரவாயில்ல அப்படின்னு மனநில இருந்தா தான் எல்லோர்க்கும் நல்லது)
ஆனா அதுவே கொஞ்ச நாளைக்கு அப்புறம் இதுதானா? இவ்வளவு தானா? என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது.
இதே நேரத்தில் இருவருக்கும் உள்ள நல்ல கெட்ட பழக்கங்கள் இருவருக்கும் தெரியவர ஆரம்பிக்கின்றது.
ஒருவருக்கு உள்ள பழக்க வழக்கம் மற்றொருவருக்கு பிடிப்பதில்லை. அவள் தான் நமக்கு தகுந்த மாதிரி மாற வேண்டும் என்று இவனும், அவன் தான் நமக்கு தகுந்த மாதிரி மாற வேண்டும் என்று இவளும் நினைக்கின்றனர்.
இரண்டு பெரும் விட்டுக்கொடுத்து போனால் தான் வண்டி ஓடும் இல்லாட்டி கொட சாஞ்சிடும். ஜாதகத்த மீறி மனதில் வைக்க வேண்டியது இந்த செய்தி தான்.
ஜாதக ரீதியா
யாருடைய ஜாதகத்தில் ஏழாம் அதிபதி உச்சம் அல்லது ஆட்சி பெறுகிறானோ அவனுக்கு திருமணத்தின் மூலமும் மனைவி மூலமும் மகிழ்ச்சி பொங்கும். ஏழாம் அதிபதிக்கு சுபர் பார்வை இருத்தல் ரொம்ப நல்லது. அசுபர் பார்வை இருப்பின் கொஞ்சம் பிரச்னை ஏற்படலாம்.
ஏழாம் அதிபதி சுபர் சேர்க்கை, நட்பு ராசியில் இருத்தல் நலம். ஏழாம் அதிபதி அசுபர் சேர்க்கை, பகை வீட்டில் இருத்தல் கொஞ்சம் சிக்கல் தரலாம்.
இதுவே ஏழாம் அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மாட்டிக்கொண்டால் மனைவிக்கு சிக்கல் தான். அது அவர்களின் ஆட்சி உச்ச வீடுகளாக இருந்தால் பரவாயில்லை.
ஜாதகத்துல ஆயிரெத்தெட்டு விஷயம் இருந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுத்து வாழ ஆரம்பிசிங்கனா...
பரவாயில்லையே
இவங்க...இவங்களுக்கு ஏன் நல்லது செய்ய கூடாதுன்னு கடவுள் நினைக்கலாம்.
யாரு விட்டு கொடுத்து வாழ்கிறார்களோ அவர்களுக்குத் தான் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
ஹும்
...இது எங்களுக்கு தெரியாதான்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது)
-
யாருக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்கை அமையும்? பகுதி-2
முந்தைய பதிவு முன்னோட்டம்...இது கொஞ்சம் ஆழம்.
விட்டு கொடுத்து வாழ்வதிலும் சிக்கல் வரலாம். நான் மட்டும் தான் விட்டு கொடுக்கனுமா ஏன் அவள்/அவன் விட்டு கொடுக்க கூடாதா என்ற கேள்வி அடுத்து எழும். இரண்டு பேருமே விட்டு கொடுத்து போக வேண்டும். விட்டு கொடுப்பதிலே போட்டி வருவதுதான் நல்லது. உனக்காக நான் இத கூட செய்யா மாட்டேனா என்று ஒருவர் மாறி ஒருவர் விட்டு கொடுப்பதிலே தான் மகிழ்ச்சியே .
இங்கே ஒருவர் மட்டும் விட்டு கொடுக்க மற்றவர் இப்படியே அவர் நம் வழிக்கு வந்து விடுவார் என்று நினைப்பது அரக்கத்தனம். அவர்களுக்கு எடுத்த சொல்ல வேண்டியது தான் அடுத்த வேலை. மனம் திறந்து பேசுங்கள். புரிய வைக்க முயலுங்கள். பேசினாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்.("அதுல" கொஞ்சம் அகிம்சையும் முயற்சி பண்ணி பாக்கலாம்) நீங்கள் விட்டு கொடுப்பது மற்றவர்க்கு தெரிய வேண்டும் அப்பொழுதுதான் அவர்களும்...நமக்காக இவ்வளவு விட்டு கொடுத்திருக்கார் ஏன் நாமும் விட்டு கொடுத்து போக கூடாது என்ற நல்லெண்ணம் வரும்.
ஜாதக ரீதியாக பார்த்தால் ஏழாம் வீடுதான் திருமணத்திற்கு ரொம்ப முக்கியம்.
ஏழாம் வீட்டில் எந்த கோள்களும் இல்லாமல் இருத்தலே நலம்.(அப்படின்னு தாங்க நினைக்கிறேன்). ஏழாம் வீட்டில் சுப கோள்கள் இருந்தாலும் அதனாலயும் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. அப்படி கோள்கள் இருக்கிற பட்சத்தில் அது சுப கோள்களா இருந்தா கொஞ்சம் பரவாயில்லை . சுபர் பார்வை மிக நல்லது.
பாவிகள் அமர்ந்தால் கொஞ்சம் சிக்கல் அதிகம் தான்.
அதேபோல் ஏழாம் வீட்டு அதிபதியும் சுபராக இருத்தல் நலம். இது மகிழ்ச்சியான மணவாழ்க்கையும், அழகிய துணையையும் தரும்.
உங்க லக்னத்துக்கு ஏழாம் வீடு பாவி வீடா இருந்தா கொஞ்சம் சிக்கல் தான்.
ஏழாம் வீட்டு அதிபதி சுபரின் நட்சத்திரத்தில் இருத்தல் நல்லது, பாவியின் நட்சத்திரத்தில் இருந்தால் கொஞ்சம் சிக்கல் வரும்...வரலாம்.
அதேபோல் சுக்கிரனும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். சுபர் பார்வை நலம், பாவர் பார்வை சிக்கல் தரும். சுபர் சேர்க்கை நலம், பாவர் சேர்க்கை சிக்கல் தரும்.
ஏழாம் வீடு, ஏழாம் அதிபதி, சுக்கிரன் இவர்கள் இரண்டு தீய கோள்களுக்கு நடு வீட்டில் மாட்டினால் சிக்கல் தான்.
அதிபதி மற்றும் சுக்கிரன் சுபர், நட்பு கோள்கள் நட்சத்திரத்தில் இருத்தல் மிக்க நன்று.
இந்த கோள்கள் நவாம்சத்திலும் நல்ல நிலையில் இருத்த்தல் மிக்க நன்று.
(நடக்கிற தசை புத்திய பொறுத்து, கோள்சாரத்தை பொறுத்து இந்த விதிகள் வேலை செய்யும் அல்லது செய்யாமல் போகலாம்)
எது எப்படி இருந்தாலும் மனம் விட்டு பேசி, கடவுள் மேல பாரத்த போட்டுவிட்டு, விட்டு கொடுத்து யாரு போறாங்களோ அவங்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.
-
yemmaadi yewlawwwww perusu...!! oru valiya padichi mudichiten.
angel madem yennamo solla varinga nu theriuthu but wat nu thaanga therila vittu koduthu poganum avalaw thaane ithuku yean ivalawwww periya story thalaiye suthutu.. ungalukku yenna ippo vittu kuduthu poganum life la avalaw thaane k angel madam don spice vittu kuduthu vaala porar..! :P
-
spince machi yenathe vitutu vaala poree
-
micro diary na valkkai ya vittu koduthu vala poren ya.. :)
-
spince etho valtha sarithan
-
oru 5 min spend panni padikave kasta padurenga life longa enna panna porenganathuthan antha post ;)
-
// யாரு விட்டு கொடுத்து வாழ்கிறார்களோ அவர்களுக்குத் தான் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். //
apadiya
nama life epadi irukum
-
naai kadi poonai kadiya ;D
-
ha ha