FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: MysteRy on October 11, 2013, 08:55:53 PM

Title: ~ ஒரு தாயின் கதை:: ~
Post by: MysteRy on October 11, 2013, 08:55:53 PM
ஒரு தாயின் கதை::

(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/1380594_627463103970689_1544399768_n.jpg) (http://www.friendstamilchat.com)


ஒரு ராணுவப்படை வீரர்கள் கும்பலாக வருகிறார்கள். கண்ணில்பட்டவர்களை யெல்லாம் வெட்டிச்சாய்க்கிறார்கள்.

மக்கள் அலறியபடி பாதுகாப்பானஇடத்தை நோக்கி ஓடுகின்றனர். தெருவில் இரண்டு கைக்குழந்தைகளுக்கு ஒரு பெண் சாதம்ஊட்டிக் கொண்டிருக்கிறாள். ராணுவப்படை வருவதை அறிந்து குழந்ததூக்கிக் கொண்டு ஓடுகிறாள்.

ராணுவம் பக்கத்தில் வந்துவிட்டது. இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஓடினாஅவள் தப்பிக்க முடியும். இரண்டுகுழந்தைகளின் முகத்தையும் பார்க்கிறாள். சற்று நேரத்தில்ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஒரு குழஇறக்கி விடப்பட்ட குழந்தை அவள்கண்முன்னே வெட்டப்பட்டு மரணிக்கிறது.

அவளிடம் ஒரு பெரியவர் கேட்கிறார், ''ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகளும் சமமானதுதானே!அப்படி இருக்கும்போது எதை வைத்து ஒரு குழந்தையை விட துணிந்தாய்?'' என்று.

அந்தப்பெண் கண்ணீருடன் சொன்னாள், ''என்குழந்தைக்கும் பக்கத்து வீட்டுக்குழந்தைக்கும் சாதம் ஊட்டிக்கொண்டிருந்தேன். அப்போது தான் ராணுவம் வந்தது.

பக்கத்துவீட்டுக் குழந்தையை இறக்கிவிடஎனக்கு அதிகாரம் கிடையாது. அதனால் என் குழந்தையை இறக்கிவிட்டு பக்கத்து வீட்ட குழந்தையைக் காப்பாற்றினேன். ''அந்தப் பெரியவர் கண் கலங்கினார்.

எழுத்தாளர் எஸ்,ராமகிருஷ்ணன் சொன்ன ஜப்பானியக் கதை. இது. ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் கதை.