FTC Forum

Special Category => இன்றைய ராசிபலன் => Topic started by: kanmani on October 09, 2013, 10:30:28 PM

Title: இன்றைய ராசி பலன்கள் - 09/10/2013 (9th Oct)
Post by: kanmani on October 09, 2013, 10:30:28 PM
இன்றைய ராசி பலன்கள் - 09/10/2013



மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன அவமானங்கள், வந்து போகும். பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக் கிறது. உத்யோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். திட்ட மிட்டு செயல்பட வேண்டிய நாள்.


ரிஷபம்: எதையும் தன்னம் பிக்கையுடன் செயல்பட தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டு பேசுவர். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.


மிதுனம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பயணங்க ளால் மகிழ்ச்சி தங்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.


கடகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.


சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பிள்ளை களால் நிம்மதி கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


கன்னி: தைரியமாக சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் ஆதாயம் உண்டு. பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்தியை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.


துலாம்: கணவன்,மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உறவினர்களி டம் எதிர்பார்த்த உதவி கிட்டும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். உற்சாகமான நாள்.


விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு வந்து செல்லும்.கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes, love astrology, birth astrology, astrology

தனுசு: தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பி கொண்டிருக்காதீர்கள். யாரையும் எடுத்தெரிந்து பேச வேண்டாம். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.

மகரம்: எதிர் பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வீட்டை விரிவுப்படுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிறப்பான நாள்.

கும்பம்: சாதித்துவிடுவோம் என்ற நம்பிக்கை பிறக்கும். உறவினர்கள் உங்களிடம் முக்கிய விஷயத்தை பகிர்ந்து கொள்வர். உங்களால் வளர்ச்சி அடைந்த சிலரை இப்போது சந்திக்க நேரும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளராவர். உத்யோகத்தில் முக்கிய முடிவு எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
 

மீனம்: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர். பிள்ளைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.