FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on October 09, 2013, 07:05:34 AM

Title: என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் பகுதி 3
Post by: aasaiajiith on October 09, 2013, 07:05:34 AM
நல்லவேளை
விலங்கிடபடவிருந்த கைகளை
விலங்கிடபடுவதில்  இருந்து
விலக்களித்து  விட்டாய்  ...
நல் வார்த்தைகள்  நிறைந்த வரிகளும்
இனி வெகுவாக வெளிவரும்
இல்லையேல் , 
வார்த்தைகள் எல்லாம்
ஒன்றுகூடி, வரிசையில் நின்றபடி
என் கற்பனாதேவியை  வசைபாடி  இருக்கும் ...
விரக்கதியின்  விளிம்பினில் ...

சந்திரனும் சுட்டெரிக்கும்
சூரியனும் சில்லிடும்
புயலும் பொறுமையாய்
மொட்டவிழும் கட்டழகை 
கண்கொட்ட ரசிக்கும்
கடலும் அதி அமைதியாய்
அலைகள் ஆடாது 
மௌன அஞ்சலி செலுத்தும்
மின்சாரமும்  மேனி சிலிர்த்திடும்
சிறு ஸ்பரிசத்தீண்டல் தரும்
என்பவற்றை  ஒப்புக்கொண்டேன்
என்  கவி வரிகளால் உனக்கு
வலி என்ற அந்நொடியில் ....


சின்னவளே !
சிம்மாசனமிட்டு சிறு மனதினில்
அமர்ந்திருப்பது போதாமல்
கீழிமைக்கும் மேலிமைக்கும்மிடை
இதமாக இருந்துகொண்டு
உறக்கத்தை நெருக்கமில்லாதாக்கி
இரக்கத்தின் பிறப்பிடமாய்
எனை உறங்கிட சொல்வது, 
எவ்வழி முறையோ ??