FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on October 09, 2013, 06:56:31 AM

Title: என் கிறுக்கல்களின்சில சிதறல்கள் - பகுதி 2
Post by: aasaiajiith on October 09, 2013, 06:56:31 AM
ரத்த அணுக்களில்   இருந்து ,
ரத்தத்தை சுத்தம் செய்யும்
இதயத்துடிப்புவரை
உன் நினைவின் சாரம் கொண்டே
செயல்படுகின்றது சிலகாலமாய் .....


தேவதைகள் இனத்தின் கூட்டமே
ஒட்டுமொத்தமாய்,
முத்தமிட துடிக்கும் உன்
தேன்மலர் இதழ்கள் கொண்டு
வாசிப்பதனாலோ
இக்கிறுக்கனின் கிறுக்கல்கள் கூட
இனிக்கும் கவிதையாய் ....

உணர்வுகளை உட்பூட்டி உள்ளடக்கும்
உன்னால் என் உணர்வுகள்
ஆட்சி செய்யப்படுவது தான் 
ஆட்சரியத்திர்க்கே
அதிர்ச்சி கொடுக்கும்
ஆச்சர்யம் ...

பூ உலகினில் இதுவரை பிறந்தழிந்த
பிறந்திருக்கின்ற , இனி பிறக்கவிருக்கின்ற
ஒட்டுமொத்த பூக்களின் வாசத்தையும்
வெகு எளிதில் வீழ்த்தி வென்றவளாய்
வெற்றியினை தன்வசம் வைத்திருக்கும்
வசீகரிக்கும் வனப்புடன் விளங்கிடும்
வசீகரி,  நின் எழில் நாசி பிறந்திடும்
நின் வசிய சுவாசமே !!!