(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F10%2Fndriyz%2Fimages%2Fp66.jpg&hash=122b63ad7d21e548d6ea9b845b5186d9833aa59d)
இன்ஸ்டன்ட் டேஸ்ட்டி வடை!
தேவையானவை:
ஜவ்வரிசி - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 3, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கெட்டி அவலை மிக்ஸியில் மிக லேசாக ஒரு சுற்று சுற்றி... குறைந்த அளவிலான, சற்றே வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடங்கள் ஊறவிடவும். அதற்குள் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பொட்டுக்கடலை, உப்பு, ஜவ்வரிசியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அவலுடன் சேர்க்கவும். இதனுடன் இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள், பொடியாக அரிந்த கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்து... மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரிக்கவும். சத்தான, சுவையான இந்த வடையை 15 நிமிடத்தில் தயார் செய்துவிடலாம்.
பாப்கார்ன் ஸ்வீட் பால்ஸ்
தேவையானவை:
உலர் திராட்சை - 10 அல்லது 15, வறுத்த முந்திரி - 10 (சிறியதாக பொடித்துக்கொள்ளவும்), பாதாம்பருப்பு - 10 (ஒன்றிரண்டாக உடைக்கவும்), கொட்டை நீக்கிய பேரீச்சை துண்டுகள் - சிறிதளவு, பொடித்த வெல்லம் - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
வெல்லத்தை நீரில் கரைத்து வடி கட்டி, அடுப்பில் வைத்து, கெட்டிப் பாகாகக் காய்ச்ச வும். இதனுடன் நெய்யை விட்டுக் கலக்கி, ஏலக் காய்த்தூள் சேர்க்கவும். மற்ற அனைத்துப் பொருட்களையும் வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு நன் றாகக் கலந்து... பிறகு, வெல்லப்பாகை பரவலாக ஊற்றி நன்கு கிளறி, உருண்டைகளாக உருட்டவும்.