FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Maran on October 08, 2013, 05:35:41 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FImages%2Fhema_zpsa089422f.jpg&hash=e43903ed19a39ce0a32b38d08728c8f8d87ef840)
உதடு சுழித்துக்
கிழித்த துண்டில்
இழுத்து எறியப்பட்ட
சில வார்த்தைகளால்
துடித்துத் தவிக்கும் சில உயிர்கள்.
ஓடி அடங்கி
அவிழ்த்தோடும்
நாடி நரம்புகள்கூட
செரிக்கமுடியா வார்த்தைகளால்
அவதியுறும்.
தேடி விடியும்
நாளொன்றின் கதவுகள் திறந்து
சாத்தான்களோடு
கூடிவரும்
அந்நாளில்
அந்த வார்த்தைகள்!!!
- Anonymous
-
very nice poem machi keep rock more