FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Maran on October 08, 2013, 05:28:34 PM

Title: காதல் சேமிப்பு...
Post by: Maran on October 08, 2013, 05:28:34 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FImages%2F37_zps59884a80.jpg&hash=c3db985605318aeb20a194de3f55df3cc44089c1)

உன் அத்தனை நினைவுகளையும்
சேமிக்கத் தொடங்குகிறேன்
சிரிக்கும்பலூன்
பேசும் பலூன்
திட்டும் பலூன்
கொஞ்சும் பலூன்
அதட்டும் பலூனென...

பலூன்கள் வெடிக்கும்
காற்றில் பறக்கும்
ஒருநாள் என்பாய்
உண்மைதான்
காலம்...
என்னையும் காற்றாக்கியிருக்கும்
உன் அன்பின் துகள்களோடு
அந்நேரம்!!!


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FImages%2F4_zpsb879d546.jpg&hash=3f8cdd19071d164a343108c940c30af0f031e7fe)

அடித்து ஓய்ந்த
கனத்த மழை
களைத்துவிட்ட
மூன்றாம் நாளில்
குப்புறக் கிடக்கும்
ஒற்றைச்சருகொன்று
ஒளித்து வைத்திருக்கிறது
உன் பெயரை
மென்னீரம் தடவி
உனக்குள் கிடக்கும்
என் நினைவுபோல்!!!

- Anonymous