FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Maran on October 08, 2013, 12:02:23 PM

Title: எழுதா வரிகளில்...
Post by: Maran on October 08, 2013, 12:02:23 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FImages%2F532280_247794288673050_612686666_n_zpsb77a2262.jpg&hash=05d115832815f185c18b70ee824e2d8350e097a7)

உருவம் உலர்ந்து
மரித்துக்கொண்டிருக்கும்
பறக்கவியலா
எண்ணெய் தோய்ந்த சிறகொன்றை
பெயரில்லாப் பூச்சியென
புல்லிடுக்கில்
முண்டி வளரும் புல்லென
கண்டிருந்தேன்
புறநகர் வீதியொன்றில்.

பெரியாரையும்
ஓஷோவையும்
சேகுவராவையும்
தனக்கான அடையாளங்களோடு
தன் அலமாரியின்
இரண்டாவது அடுக்கில்
சேமித்து
வம்சம் வளர்க்க
நானென்ன இயந்திரமாவெனக்
கேட்டவளை....

எழுதப்படா
என் கவிதை வரிகளில்
நீண்ட வகிடெடுத்து
இரட்டைப்பின்னலோடு
சில கம்பீர வரிகளில்
பொருத்தியுமிருந்தேன்.

அலட்சியங்களுக்குள்
அர்த்தமற்ற சுலோகமென
புதைகிறது
சில இலட்சியங்கள்!!!


- Anonymous
Title: Re: எழுதா வரிகளில்...
Post by: aasaiajiith on October 08, 2013, 02:06:58 PM
நல்லா இருக்கு..

இருந்தும் ,
இன்னும் கொஞ்சம்
இலகுவா இருக்கலாம் !!!