FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on November 14, 2011, 02:37:34 AM
-
சொல்
சூளையில் சுட்ட மண்
செங்கலானது
புகை நெருப்பில்
வெந்த நெல்
உணவானது
நாவினால் சுட்ட
புண் நெஞ்சில்
ரணமானது
வெஞ்சினமானது
மீளாத் துயரானது
நெடு நாள் ரணமான
சுடு சொற்கள் பின்
மறையா வடுவானது
மாறா நினைவானது
கடற் கரை
ஈரம் காய
அலையனுப்பும்
உப்பு நீருண்டு
மண் உலராமல்
காக்க தவறாத
வான் மழையுண்டு
நெஞ்சுலரா உன்
சொற்கள் மட்டும்
செவி வழியே
உட்சென்று
சுடு சொல்லாய்
கடும் சொல்லாய்
ஈர நெஞ்சை
உலர்த்திவிடும்
கொடுமைதான் ஏன் மனிதா