FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: micro diary on October 07, 2013, 02:03:02 PM

Title: அழகு
Post by: micro diary on October 07, 2013, 02:03:02 PM
மழையோடு ஓவியமாய்
சிரிக்கும் வானவில்
அழகு..
மடலை கூட மவுனமாய்
விரிக்கும் பூக்கூட்டம்
அழகு..
மழைதொடும் தருணத்தில்
மணக்கும் பூமிப்பெண்…
அழகு..
சம்பளமின்றி சல்யூட் செய்யும்
சாலையோர மரங்கள்..
அழகு….
சத்தமின்றி கருவறையில்
சந்தோசப்படுத்தும் பிஞ்சுசிசு
அழகு…
புன்சிரிப்பில் மவுனமாய்
புண்படுத்தாத உறவுகள்
அழகு…..
சுவாசமுள்ளவரை சுவாசத்தில்
சுவாசிக்கும் நம்  காதல்
அழகு..
எங்கிருந்தாலும் மவுனமாய்
நலம் விரும்பும் நட்பு
அழகு..
Title: Re: அழகு
Post by: Arul on October 07, 2013, 02:45:03 PM
சுவாசமுள்ளவரை சுவாசத்தில்
சுவாசிக்கும் நம்  காதல்
அழகு..

எல்லாமே மிக அழகு micro ...............