FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on October 06, 2013, 06:05:01 PM

Title: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~
Post by: MysteRy on October 06, 2013, 06:05:01 PM
எளிய இயற்கை வைத்தியம்:-

(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn2/1383356_619699421385710_762812181_n.jpg)


மூலநோய் குணமாக:-

பப்பாளிப் பழத்தை மாம்பழம் போன்று துண்டு துண்டாக வெட்டி, தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.

வாந்தி நிற்க:-

அடிக்கடி வாந்தி வந்தால் அருநெல்லிக்காயைத் தின்றால் நின்றுவிடும்.

மலச்சிக்கல் நீங்க:-

அகத்தி இலையை நன்கு உலர்த்தி தூளாக்கி சல்லடையில் சலித்து எடுத்து வைக்கவும். தினமும் அதிகாலையில் கால் டீஸ்பூன் தூளை வாயில் போட்டு வென்னீரைக் குடித்து வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது.

தேமல் மறைய:-

தேமல் மறைய பூவரச மரத்தின் விதையுடன் எலுமிச்சம்பழ சாறுவிட்டு அரைத்து, தேமல் உள்ள இடங்களில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து வென்னீரில் கழுவி வந்தால் தேமல் மறைந்து பூரண குணமாகும்.

காதுகளில் தொல்லை இருக்கிறதா?

மகிழம் பூவை எண்ணெயில் போட்டுக் காய்ச்சி தலையில் தேய்த்துக் குளியுங்கள். காதில் ஏற்படும் எல்லா நோய்களையும் இந்த மகிழம்பூ எண்ணெய் குணமாக்கிவிடுகிறது.

சளித் தொல்லை நீங்க!

குப்பைமேணி இலையுடன் நாட்டு வெங்காயத்தை அரைத்துச் சாறெடுத்து காய்ச்சிக் குடித்தால் சளித்தொல்லை நீங்கி உடனே உடல் நலம் பெறும்.

இண்டிலை, தூதுவலை, சுக்கு, திப்பிலி இவற்றை இடித்து சாறெடுத்து வடிகட்டி காய்ச்சிப் பருக பறந்தோடிவிடும் இருமல் நோய்.

ஊமத்தம் பூவை காயவைத்துக் கொளுத்தி, அதில்வரும் புகையை முகர்ந்தால் எப்படிப்பட்ட இருமலும் நின்றுவிடும்.

எளிதில் ஜீரணமாக:-

ஓமவள்ளி இலையில் கசாயம் எடுத்து காலை வேளையில் மூன்று ஸ்பூன் கொடுத்து வந்தால் குழந்தைக்கு நன்றாக ஜீரணமாகும்.

விக்கல் விரைந்தோட:-

எட்டு திப்பிலியும், பத்துச் சீரகமும் தூள் செய்து தேனில் கலந்து உண்ண விக்கல் விரைந்தோடும்.

மூலக்கடுப்பு நீங்க:-

நெல்லி, முள்ளி, வெந்தயம் இரண்டையும் சம அளவு எடுத்து பொடியாக்கி தயிர் கலந்து சாப்பிட்டால் மூலக்கடுப்பு குணமாகும்
Title: Re: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~
Post by: MysteRy on October 06, 2013, 06:08:39 PM
எளிய இயற்கை வைத்தியம்:-

(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash4/1374191_619301068092212_1091460456_n.jpg)


தலைச் சுற்றலுக்கு:

முருங்கை இலைக் கொழுந்தைத் தாய்ப்பால் விட்டரைத்து நெற்றியில் பற்றுப்போடவும். சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சம் வேர், கிராம்பு இவைகளை வகைக்கு 5 கிராம் எடுத்து சூரணமாக்கி, தினம் இரண்டு வேளை சாப்பிடவும்.

தலை கனத்துக்கு:

சுக்குப் பற்றுப் போடலாம். வசம்பு பற்றுப் போடலாம். வால்மிளகை சுடு நீரில் அரைத்துப் பற்றுப் போடலாம்.

அஜீரணம் அகல:

ஓம வாட்டரும், தேனும் கலந்து குடிக்கலாம். அல்லது ஓமத்தை வாணலியில் பொரித்து, தண்ணீரில் வேகவிட்டு அந்த தண்ணீரையும் வடிகட்டிக் குடிக்கலாம். அல்லது சோடா, எலுமிச்சம்பழம் உப்பு போட்டு அருந்தினாலும் வயிற்றுவலி குறைந்து ஜீரணம் ஏற்படும்.

ஆறாத ரணங்களுக்கு:

மஞ்சளைச் சுட்டு பொடி செய்து காலையிலும், மாலையிலும் தேங்காய் எண்ணெயில் குழப்பி புண்ணில் பூசவும். அல்லது மருதாணி எண்ணெய் போடலாம்.

இருமலுக்கு:

வால் மிளகு, அதிமதுரம், சித்தரத்தை, திப்பிலி (ஒரு சிறிது மட்டுமே). துளசியிலை இவற்றை அவித்து சாறு எடுத்து பனங்கற்கண்டுடன் ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தலாம்.

உடல் வலி தீர:

துளசியிலை, மிளகுப்பொடி, சுக்குப்பொடி இவைகளை தண்ணீரில் போட்டு கஷாயமாக்கி பாலும், சர்க்கரையும் சேர்த்துப் பருகவும்.

உடல் அழகுற:

ஒரு டம்ளர் பாலில் குங்குமப்பூ போட்டுக் காய்ச்சி வெதுவெதுப்பான சூட்டில் 1 தேக்கரண்டி தேன் விட்டுப் பருக ஒரு மண்டலத்தில் உடல் தேஜஸ் பெறும்.

தொண்டை கட்டி குரல் பேச எழும்பாவிடில்:

சுண்ணாம்பை கால் பெருவிரலில் தடவவும். அல்லது மஞ்சள், சுண்ணாம்பு, தேன் மூன்றையும் மசித்து கழுத்தில் தடவவும். அல்லது உப்பும், வெந்நீரும் கொண்டு இரண்டு மூன்று முறை கொப்பளிக்கவும்.
Title: Re: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~
Post by: MysteRy on October 12, 2013, 11:18:42 PM
எளிய இயற்கை வைத்தியம்:-

(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn1/536221_622462421109410_1297142249_n.jpg)


தலைமுடி கருமையாக வளர:


சிலருக்கு இளவயது நரை, முடி செம்பட்டை, முடி உதிர்தல் போன்றவை உண்டாகும்.

எள்ளுச் செடியின் இலைகள், வேர் ஆகியவற்றை எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து அதனை தலையில் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின் அலசி வந்தால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும். தலைமுடியும் கருமையாக நீண்டு வளரும்.

கண் சிவப்பு மாற:

சிலருக்கு உஷ்ணம் அதிகமாவதால் கண்களில் மேல் கட்டி மற்றும் கண்விழிகள் சிவந்துபோதல் போன்றவை உண்டாகும். இவர்கள் நாமக்கட்டியை தண்­ணீரில் குழைத்து கண் இமைகளின் மீது பற்று போட்டால் கண் கட்டி மற்றும் கண் சிவப்பு மாறும்.

தேமல் வந்து தடிச்சிப் போச்சா....

பழுத்த பூவரசு இலை, வேப்பங் கொழுந்து, பொன்னாவரைப் பூ, குப்பைமேனி இலை, இலவம் இலை (இலவம் பஞ்சு மர இலை) கார்போக அரிசி, கருஞ்சீரகம் இதையெல்லாம் சம அளவு எடுத்து ஒண்ணாச் சேர்த்து அரைத்து தேமல் இருக்குற இடத்துல தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து பிறகு குளிக்கணும்.

இன்னொரு வைத்தியம்:

முட்டையோட வெள்ளைக்கரு, வெந்தயம், வெள்ளரிப் பிஞ்சு இந்த மூன்றையும் சேர்த்து அரைத்தும் தடவலாம்.

கபம் அதிகமா இருக்குற உடம்புக்குத்தான் தேமல் வரும். கபம் அதிகமாக இருந்தாலே தோல் தடிச்சுப் போகும். மலச்சிக்கல், தூக்கமில்லாம இருக்கிறது இப்படி பல காரணத்துனால இந்த தேமல் வரும்.
Title: Re: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~
Post by: MysteRy on October 18, 2013, 08:52:20 PM
எளிய இயற்கை வைத்தியம்:-

(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn2/1381353_624073630948289_2002286195_n.jpg)


கீழாநெல்லி இலையுடன் கரிசாலை இலையை சேர்த்து பாலில் கலந்து கொடுத்து வந்தால் இரண்டு மூன்று நாட்களிலேயே காமாலை நோய் நீங்கும்.

கற்றாழைச்சாற்றை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி தலைக்குத் தேய்த்துவந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

ஆடாதோடா இலைக்கஷாயம் சாப்பிட்டால் உடல் குடைச்சல், வாத பித்த கோளாறுகள் நீங்கும். இலைச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு, காமாலை, காய்ச்சல் போன்றவையும் நீங்கும்.

உடல் சூட்டாலோ, கண்ணில் அடிபட்டதாலோ கண் சிவந்து விடுவது உண்டு. இதை குணப்படுத்த புளியம் பூவை அரைத்து கண்களைச் சுற்றிப் பற்று போட்டுவந்தால் கண்கள் சிவப்பது சரியாகும்.

வெள்ளைப் பூண்டை நைத்து அதன் சாறு உடலில் ஊறும்வரை படையின் மீது போட்டு நன்றாகத் தேய்க்க வேண்டும். தினமும் காலை மாலை படை உள்ள இடத்தை சோப்பு போட்டு கழுவிய பின் இந்த விதமாக தேய்த்து வர ஆறே நாளில் படை நீங்கும்.

அசோக மரத்தின் உட்பட்டையையும், அத்தி மரத்தின் உட்பட்டையையும் கொண்டுவந்து ஒரு சட்டியில் போட்டு ஒரு குவளை தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டி அரை குவளை வீதம் எடுத்து சர்க்கரைச் சேர்த்து காலை வேளையில் மட்டும் தொடர்ந்து ஏழு நாட்கள் கொடுத்து வந்தால் வெள்ளைப்படுதல் நீங்கும்.

சுத்தம் செய்த ஓமத்தை இளவறுவலாக வறுத்து உமி மற்றும் கசடு நீக்கி வெல்லம், தேன் கலந்து அம்மியில் அரைத்து காலை மாலை இருவேளை சாப்பிட வயிற்றுப்போக்கு நீங்கும். ஆசனக்கடுப்பு, குளிர்க்காய்ச்சல், வயிறு இரைச்சல், இருமல், செரியாமை ஆகியவற்றுக்கு ஓமம் அருமருந்தாகும்.

திடீரென காயம் ஏற்பட்டால் அரை தேக்கரண்டி சர்க்கரையில் சிறிது சுண்ணாம்பு கலந்து தண்ணீர் தெளித்து குழப்பி ரத்தம் கொட்டும் இடத்தில் தடவ ரத்தப் போக்கு நிற்கும். காயமும் சீக்கிரம் ஆறும்.

வாய்வுக் கோளாறு காரணமாக இடுப்பு வலி இருந்தால், சுடுசோறு ஒரு கை அளவு எடுத்து மெல்லிய வெள்ளை துணியில் வைத்து வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி நிற்கும்.
Title: Re: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~
Post by: MysteRy on October 19, 2013, 09:15:46 PM
எளிய இயற்கை வைத்தியம்:-

(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn2/1381353_624073630948289_2002286195_n.jpg)


பெருங்காயம்

பெருங்காயத்தை நீரில் கரைத்து ஒரு சங்களவு எடுத்து சிறிது ஓமத்தையும் சேர்த்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், வயிற்றுப் பொருமல் போகும்.

மிளகு

மிளகையும் எருக்கம்பூவையும் சம எடை எடுத்து நன்றாக அரைத்து பனை வெல்லம் கூட்டி சிறு குளுகை செய்து சாப்பிட்டால் இழுப்பு நோய் குணமாகும்.

சீரகம்

சீரகத்துடன் மிளகைச் சேர்த்துச் சாப்பிட அஜீரணம் போகும். சீரகத்தை அரைத்து எலுமிச்சை சாற்றுடன் கலந்துகொடுக்க கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும். சுண்ணாம்பில் ஊற வைத்த, பொடித்த சீரகம், வயிற்று ஜீரண நீரைச் சீர்படுத்தி அல்சர் நோயைக் கட்டுப்படுத்தும்.

வெங்காயம்

வெங்காயத்தை உப்புடன் கூட்டிச் சாப்பிட வயிற்று வலி நீங்கும். வெங்காயத்துடன் சிறிது ஓமத்தைச் சேர்த்து வேக வைத்து குடிநீர் செய்து குடிக்க நீர்த்தாரை சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.
Title: Re: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~
Post by: MysteRy on November 06, 2013, 06:25:32 PM
எளிய இயற்கை வைத்தியம்:-

(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn2/1466234_635037896518529_188873303_n.jpg)


* அருகம்புல்லைக் காயவைத்து பொடி செய்து மோரில் கலக்கி தினமும் குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

* தினமும் ஒரு டம்ளர் திராட்சைப் பழச்சாறு குடித்து வந்தால் அல்சர் குணமாகும்.

* வில்வப்பழத்தின் சதைப் பகுதியை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் குடல் சுத்தமாகும்.

* வாழைத் தண்டு பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு, ஆகியவை வெளியேறும்.

* கேழ்வரகு மாவு, எள்ளு, சிறிது வெல்லம் சேர்த்து இடித்து அடை செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆராக்கியமாக இருக்கும்.
Title: Re: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~
Post by: MysteRy on November 14, 2013, 06:04:24 PM
எளிய இயற்கை வைத்தியம்:-

(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn2/960055_636783909677261_1139930754_n.jpg)


மாமரத்துப் பிசினை ஒரு சிறு பாத்திரத்தில் போட்டு சிறிதளவு நீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும். இதை இரவு படுக்கப்போகும் முன் காலிலுள்ள பித்த வெடிப்புகளில் தடவி வந்தால் சில நாட்களில் பித்த வெடிப்பு சரியாகும்.

கசகசாவை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து அடிக்கடி தடவி வந்தால் சில தினங்களில் உடல் சருமத்தில் தோன்றும் கரும்படை மாறி தோல் இயற்கை நிறம் பெறும்.

வெந்தயத்தை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது. கருப்பாக, பளபளப்பாக இருக்கும்.

மருதோன்றி இலையை அரைத்து தலையில் ஒரு மணி நேரம் கட்டி வைத்து பின் தலை முழுகினால் கண் சிவப்பு நீங்கும்.

பல் கூச்சம் விலக வேண்டுமா? கொய்யா இலையை மென்று வெந்நீரில் வாய் கொப்பளிக்கவும்.

காதில் பூச்சி அல்லது எறும்பு புகுந்துவிட்டால் தண்ணீரில் உப்பைக் கரைத்து காதில் ஊற்ற அவை வெளியேறும்.

கண் வலிக்கு நந்தியாவட்டைப் பூவை கண்களில் ஒற்றிக்கொள்ளவும்.

தூதுவேளை வேரையும் அருகம் புல்லையும் கசக்கி துணியில் வைத்து பல்வலி இடது புறமிருந்தால் வலது காதிலும், வலது புறமிருந்தால் இடது காதிலும் மூன்று சொட்டுக்கள் மட்டும் பிழிய வலி உடனே நிற்கும்.

பல் வலியா? புதினா இலைகளை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து கால் பங்கு உப்பு சேர்த்துப்பல் துலக்கவும்.

பச்சை வாழைப் பழத்தை உண்ண விக்கல் விலகும்
Title: Re: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~
Post by: MysteRy on November 21, 2013, 06:28:32 PM
எளிய இயற்கை வைத்தியம்:-

(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-frc3/1461077_642742709081381_908485358_n.jpg)


மஞ்சள்:

மஞ்சள் நீரை அருந்த காமாலை கட்டுப்படும். மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெள்ளைத் துணியை நனைத்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு கண் நோய் உள்ளவர்கள் கண்களை துடைத்துக் கொண்டால் கண் சிவப்பு, கண் அருகல், கண்வலி, கண்ணில் நீர் கோர்த்தல் ஆகியவை தணியும். சிறந்த கிருமிக் கொல்லி, மணத்திற்காகவும் நிறத்திற்காகவும் உணவில் சேர்க்கப்படுகிறது.

ஏலக்காய்:

ஏல விதையை பனை வெல்லத்துடன் சேர்த்து இடித்துச் சாப்பிட்டால் வாயில் நீர் ஊறுதல், தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, மிகுந்த வறட்சி, கபம் முதலியன கட்டுப்படும். ஏலக்காய் எண்ணெய்யை தலைவலி மருந்துடன் சேர்த்து சுளுக்கு, அடிபட்டவீக்கம் முதலானவற்றின் மீது தேய்க்க வலி நீங்கும்.

இலவங்கம்:

இலவங்கத்தை நீர் விட்டு அரைத்து நெற்றியிலும், மூக்கின் மீதும் இட்டால் தலை பாரம் குணமாகும். இதை அனலில் வதக்கி வாயில் இட்டு சுவைத்தால் தொண்டைப் புண் ஆறும். பற்களின் ஈறு கெட்டிப்படும். தேனில் இழைத்துச் சாப்பிட்டால் உடல் வெப்பத்தைத் தடுக்கும். புண்ணில் சீழ் பிடிப்பதையும் கை, கால் நடுக்கத்தையும் இலவங்க எண்ணெய் தீர்க்கும்.

சோம்பு (பெருஞ்சீரகம்):

சோம்பை லேசாக வறுத்து பொடித்து இரண்டு கிராம் அளவில் எடுத்து சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு வேளை சாப்பிட வயிற்று வலி, வயிற்று உப்புசம், செரியாமை, இரைப்பு முதலியன நீங்கும். இதன் சூரணம் வியர்வையை உண்டாக்கி சிறு நீரை அதிகப்படுத்தும்.

வெந்தயம்:

அரிசி அல்லது ஜவ்வரிசிக் கஞ்சியுடன் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். வெந்தயத்தை ஊர வைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் தலை முடி நன்றாக வளரும். வெந்தயக் கீரை அஜீரணக் கோளாறை நீக்கும். தினமும் இரவில் ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் வரும்.
Title: Re: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~
Post by: MysteRy on December 21, 2013, 04:48:15 PM
எளிய இயற்கை வைத்தியம்:-

(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/1526328_657596540929331_75277151_n.jpg)


* பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

* வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

* தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

* வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
* பன்னீரில் ஏலக்காய், தேன் கலந்து குடிப்பது மூளைக்குப் புத்துணர்ச்சி தரும்.

* வெள்ளரிப் பிஞ்சு, இளநீர், மோர், நீராகாரம், லெமன், ஜூஸ் ஆகியவை சிறுநீரகத்தை குளுமைப்படுத்தும்.

*கசப்பும், காரமும் கலந்த சுவை கொண்டது பெருங்காயம். வாதத்தையும், கபத்தையும் இது கட்டுக்குள் வைக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் கூடும். சுவை சேர்க்க மட்டுமின்றி, உணவு செரிக்கவும் இது உதவும்

* 1 டேபிள் ஸ்பூன் ஓமத்தை மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடியுங்கள். பிறகு அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் வெல்லத்தைச் சேர்த்து அரையுங்கள் (வெல்லத்தின் நீர்ப் பசையே இதற்குப் போதும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை) இந்த பேஸ்ட்டை கரப்பான், சிரங்கு ஆகியவற்றால் வந்த தழும்புகள் மீது பூசி, பத்து நிமிடங்கள் ஊற வைத்துத் குளித்தால் தழும்புகள் மறையும்
Title: Re: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~
Post by: MysteRy on January 08, 2014, 09:01:36 PM
எளிய இயற்கை வைத்தியம்:-

(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/1527058_667013256654326_590939792_n.jpg)


பித்தம் நீங்க:

மாதுளம்பழம் சாப்பிட்டு வர அறிவு விருத்தி, ஞாபக சக்தி எலும்பு வளர்ச்சி, பித்த சம்பந்தமான வியாதி நீங்கும்.



நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க:

முசுமுசுக்கை இலையை பொடியாக நறுக்கி மாதம் 2 தடவை சாப்பிட வேண்டும்.



அம்மை நோயைத் தடுக்க:

10 கிராம் வெந்தயம், மிளகு 5 தட்டி பொடி செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி காலை, மாலை 3 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் அம்மை நோய் பரவாது.



குஷ்டநோய் குணமாக:

வல்லாரை இலையை பொடி செய்து பரங்கி சக்கை தூளையும் கலந்து வைத்து காலை, மாலை, இரவு மூன்று வேளை வெண்ணெய்யுடன் கலந்து ஒரு வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வர முழு குணமாகும்.



சர்க்கரை நோய்:

ரோஜாப்பூ, கடுக்காய், ஜாதிக்காய், தான்றிக்காய் சேர்த்து அரைத்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு நீராகாரம் குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.



யானைக்கால் நோய் குணமாக:

பசுவின் சிறுநீரும், மஞ்சள்தூள், வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் யானைக்கால் நோய் வராது.



கெட்டு போய் இருக்கும் ஈரலை குணப்படுத்த:

கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர ஈரல் வியாதி குணமாகும்.



மஞ்சள் காமாலை நோய் குணமாக:

தும்பை இலைகளை அரைத்து தலையில் பற்று போட்டு மோரில் கலந்து 3 நாட்கள் சாப்பிட மஞ்சள் காமாலை குணமாகும்.



பேதி குணமாக:

மாஸகொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் பேதி நிற்கும்.



இரத்தம் உறைதல் குணமாக:

நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் உறைவதை தடுக்கலாம்.



இரத்தம் விருத்தியாக:

செம்பருத்தி பூவை வெறும் வயிற்றில் சாப்பிட ரத்தம் விருத்தியாகும்.



இரத்த சோகையை போக்க:

தினசரி கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த சோகையில் இருந்து விடுபடலாம். மேலும், பீர்க்கன்காய் வேர் கஷாயம் சாப்பிட, ரத்தசோகை நீங்கும்.



உடல் வலி குணமாக:

வில்வ இலையும், அருகம்புல்லும் இடித்து சாறு எடுத்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர உடல்வலி குணமாகும்.



உடற் சூடு அகல:

கொத்து மல்லி விதைக் கஷாயத்தில் செந்துளசி சாற்றை சேர்த்து உட்கொண்டு வந்தால் அதிகரித்த உடற்சூடு சமநிலை அடையும்.



மந்தபுத்தி மாற:

வல்லாரை இலை தூள் 100 கிராம், வசம்பை 15 கிராம் இடித்து தூள் செய்து ஒன்றாக கலந்து தினசரி 5 கிராம் தேனுடன் சாப்பிட்டு வந்தால் மந்தபுத்தி மாறும்.



மூளை நல்ல நிலையில் இயங்க:

நாள்தோறும் பெரிய நெல்லி ஒன்றை தவறாமல் உண்டு வந்தால் நம் மூளை நல்ல நிலையில் இயங்கும்.



ஞாபக சக்தி அதிகரிக்க:

வல்லாரை கீரையை அடிக்கடி சமைத்து உண்டு வந்தால் நினைவாற்றலை அதிகரிக்கும். பாதாம்பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி போன்றவைகளை தினமும் சாப்பிட்டு வந்தாலும் ஞாபக சக்தி பெருகும்.
Title: Re: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~
Post by: MysteRy on March 07, 2014, 07:55:56 PM
எளிய இயற்கை வைத்தியம்:-

(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash3/t1/1795549_698882010134117_373364396_n.jpg)


உடலில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்சனைகளையும் உபாதைகளையும் பெரிதாக எடுத்துக்கொள்ளமல், அஜாக்கிரதையாக இருந்து விட்டால், மோசமான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆகவே, சரியான முறையில் உடலை பேணி வந்தாலே பல பிரச்சனைகள் தீர்ந்து விடும். குணப்படுத்தக் கூடிய எளிய வழிமுறைகளை சில.....

தலைமுடி கருமையாக வளர:

சிலருக்கு இளவயது நரை, முடி செம்பட்டை, முடி உதிர்தல் போன்றவை உண்டாகும்.

எள்ளுச் செடியின் இலைகள், வேர் ஆகியவற்றை எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து அதனை தலையில் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின் அலசி வந்தால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும். தலைமுடியும் கருமையாக நீண்டு வளரும்.

கண் சிவப்பு மாற:

சிலருக்கு உஷ்ணம் அதிகமாவதால் கண்களில் மேல் கட்டி மற்றும் கண்விழிகள் சிவந்துபோதல் போன்றவை உண்டாகும். இவர்கள் நாமக்கட்டியை தண்­ணீரில் குழைத்து கண் இமைகளின் மீது பற்று போட்டால் கண் கட்டி மற்றும் கண் சிவப்பு மாறும்.

தேமல் வந்து தடிச்சிப் போச்சா....

பழுத்த பூவரசு இலை, வேப்பங் கொழுந்து, பொன்னாவரைப் பூ, குப்பைமேனி இலை, இலவம் இலை (இலவம் பஞ்சு மர இலை) கார்போக அரிசி, கருஞ்சீரகம் இதையெல்லாம் சம அளவு எடுத்து ஒண்ணாச் சேர்த்து அரைத்து தேமல் இருக்குற இடத்துல தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து பிறகு குளிக்கணும்.

இன்னொரு வைத்தியம்:

முட்டையோட வெள்ளைக்கரு, வெந்தயம், வெள்ளரிப் பிஞ்சு இந்த மூன்றையும் சேர்த்து அரைத்தும் தடவலாம்.

கபம் அதிகமா இருக்குற உடம்புக்குத்தான் தேமல் வரும். கபம் அதிகமாக இருந்தாலே தோல் தடிச்சுப் போகும். மலச்சிக்கல், தூக்கமில்லாம இருக்கிறது இப்படி பல காரணத்துனால இந்த தேமல் வரும்.
Title: Re: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~
Post by: MysteRy on May 10, 2014, 10:12:20 AM
எளிய இயற்கை வைத்தியம்:-

(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1.0-9/10170874_724668444222140_3550426345561610880_n.jpg)


1. மிளகுபொடி, சுக்குப்பொடி, தண்ணீர் போட்டு கஷாயமாக்கி பாலும், வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்பு வலி தீரும்.

2. சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் ஒரு கரண்டி இஞ்சிச் சாற்றை கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு சளித்தொல்லை இருக்காது.

3. முள்ளங்கிக் கிழங்கின் சாறோடு மருதாணி வேரை இடித்து சேகரித்த சாற்றையும் சேர்த்து துளிகளாக காதில் விட்டுவர, குணம் தெரியும்.

4. வாழை மரத்துக் கிழங்கை இடித்து எடுத்து சாற்றை சற்று சூடாக்கி துளிகளாக காதில்விட்டால் காது வலிக்கு நல்ல பலனைத் தரும்.

5. தும்பைப்பூ, சுக்கு, காயம் இவற்றை எடுத்து நைத்து கடுகு எண்ணெயில் போட்டு காய்ச்சி காதில் சில துளிகள் விட்டால் குணமாகும்.

6. மாதுளம் பழத்தின் ரசத்தை சூடாக்கி இளம் சூடாக இருக்கும்போது சில துளிகள் காதில்விட வலி குறையும்.

7. சுக்கு, மிளகு, திப்பிலி, லவங்கப்பட்டை, சதகுப்பை, காயம், அதிவிடயம் ஆகிய சரக்குகளை சமஅளவு எடுத்து அரைத்து சிறிதளவு நல்லெண்ணெயையும் காடியையும் அதனுடன் சேர்த்து காய்ச்சி, அந்த எண்ணெயை காதில் சில துளிகள் விட்டு வந்தால் காது இரைச்சல் அகலும்.

8. தேவதாரு, கோஷ்டம், சிற்றாமல்லி, முன்னை, பேராமல்லி முதலியவற்றை தனித்தனியாக இடித்து நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி, ஆறவைத்து ஒவ்வொரு தைலத்திலும் ஒவ்வொரு துளி கலந்து காதிலே விட்டு பஞ்சடைத்து வந்தால், காதில் ஏற்படும் வலியுடன் ஒழுக்கு இருந்தால் குணமாகும்.
Title: Re: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~
Post by: MysteRy on May 12, 2014, 08:08:33 PM
எளிய இயற்கை வைத்தியம்:-

(https://scontent-b-kul.xx.fbcdn.net/hphotos-frc1/t1.0-9/10277014_728929903795994_3597163765519668205_n.jpg)


* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், இரத்தக் குழாயிலே கொலஸ்ட்ரால் படியாதவாறு தடுக்கும்.

* வாழைப்பழங்களில் சோடியம், கால்ஷியம், பொட்டாஷியம் போன்ற பலவகைச் சத்துக்கள் உள்ளன. ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழங்கள் வீதம் சாப்பிட்டு வந்தால் இருதய அழுத்தம் ஏறாமல் சீராக நடைபெற்று வரும்.

* தேங்காய் பயன்படுத்தும் உணவுகளில் கூடிய வரை தேங்காயைக் குறைத்துக் கொண்டு, டோஃபு எனப்படுகிற சோயா பனீரை சேர்க்கலாம். கொழுப்புச் சத்து அதிகமுள்ளவர்களுக்கும், இதயப் பாதிப்பு உள்ளவர்களுக்கும், எடை குறைக்க நினைப்போருக்கும் ஏற்றது இந்த டோஃபு.

* லவங்கப்பட்டை சேர்த்துக் கொதிக்க வைத்த தண்­ணீரை பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொண்டு, தினம் ஒரு முறை வாய் கொப்பளிக்கலாம். இயற்கையான மவுத் வாஷான இது, வாய் நாற்றத்தைக் தவிர்க்கும்.

* குழந்தைக்கு மார்பிள் சளி கட்டிக்கொண்டால், வெற்றிலையில் தேங்காய் எண்ணையைத் தடவி விளக்கில் சூடுபடுத்தி இளம் சூட்டில் மார்பில் பற்றுப்போடலாம். சளி கரைஞ்சிடும். சில குழந்தைகளுக்கு தலையில் சூடு இருக்கும். இதுக்கு குங்குமப்பூவை அரைச்சு பத்துப் போடலாம்.

* தினம் ஒரு கேரட்டை பச்சையாக கடிச்சி சாப்பிட்டால் வாத நோய் ஏற்படற வாய்ப்பு 68 சதவீதம் தவிர்க்கப்படுகிறது.

* வேலைக்கு போற பெண்கள் சிலர் அவசரத்துல சாப்பிடக்கூட மாட்டார்கள்... அந்த மாதியான பெண்கள் காபி குடிக்கிற டம்ளர்ல ஒரு டம்ளர் கேப்பைக்கூழ் குடிச்சிட்டுப்போகலாம். பசி அடங்குவதோடு உடம்புக்கு சத்தையும் தரக்கூடியது கேப்பைகூல்.
Title: Re: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~
Post by: MysteRy on May 21, 2014, 05:27:06 PM
எளிய இயற்கை வைத்தியம் :-

(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1.0-9/s403x403/1376605_733969229958728_1466904756625009276_n.jpg)


* ரோஜாமொக்கு, சுக்கு, ஏலக்காய், கொத்துமல்லி வகைக்கு 5 கிராம் எடுத்து இளவறுப்பாக வறுத்து அம்மியில் வைத்து பெரும் பருக்கையாக உடைத்து வைத்துக்கொண்டு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தேக உஷ்ணம் சமப்படும்.

* நிம்மதியான உறக்கத்தைப் பெற ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து இரண்டு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.

* சூட்டினால் ஏற்படும் வலியாக இருந்தால் தொப்புளைச்சுற்றி ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி தொப்புளுக்குள்ளும் விடலாம்.

* வயிற்று எரிச்சல் சுக்குத்தூளை கரும்புச் சாற்றுடன் கலந்து சாப்பிட, வயிற்று எரிச்சல் தீரும்.

* தொண்டைக்கட்டு ஜலதோஷத்தினால் தொண்டை கட்டிக் கொண்டால் மிளகைப் பொடி செய்து, ஒரு ஸ்பூன் நெய்யை சூடு செய்து அதில மிளகுப் பொடியை சேர்த்துக் குடித்தால் தொண்டைக் கட்டு விலகும்.

* வெள்ளரிக்காய் விதையை அரைத்து அத்துடன் ஐந்து பங்கு நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நீரடைப்பு, நீர் எரிச்சல் ஆகியவை போகும். பசி கொடுக்கும் ஆற்றலும் வெள்ளரிக் காய்க்கு உண்டு.

* பெருங்காயத்தை நீரில் கரைத்து ஒரு சங்களவு எடுத்து சிறிது ஓமத்தையும் சேர்த்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், வயிற்றுப் பொருமல் போகும்.

* மிளகையும் எருக்கம்பூவையும் சம எடை எடுத்து நன்றாக அரைத்து பனை வெல்லம் கூட்டி சிறு குளுகை செய்து சாப்பிட்டால் இழுப்பு நோய் குணமாகும்.

* சீரகத்துடன் மிளகைச் சேர்த்துச் சாப்பிட அஜீரணம் போகும். சீரகத்தை அரைத்து எலுமிச்சை சாற்றுடன் கலந்துகொடுக்க கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும். சுண்ணாம்பில் ஊற வைத்த, பொடித்த சீரகம், வயிற்று ஜீரண நீரைச் சீர்படுத்தி அல்சர் நோயைக் கட்டுப்படுத்தும்.
Title: Re: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~
Post by: MysteRy on June 15, 2014, 08:20:34 PM
எளிய இயற்கை வைத்தியம் :-

(https://scontent-a-kul.xx.fbcdn.net/hphotos-xfa1/t1.0-9/10406849_748770651811919_562367754060117601_n.jpg)


அஜீரணசக்திக்கு

அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.

அம்மைநோய் தடுக்க!

அம்மைநோய் தடுக்க-ஒரு முற்றின கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம்.

அறுகம் புல்

இந்த அறுகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டிசெய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்தநீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தழடற்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும் என வைத்திய ஆடூடம் கூறுகிறது.

அம்மைநோய் வேகத்தை தணிக்க!

பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். அம்மைத் தளிம்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவடும். தினம் சந்தனச் சோப்பு பாவிக்கவும், செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைவாசியக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கொடுத்தால் வேகம் தணியும்.

அகத்திக்கீரை

உள்ளே இருக்கும் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை வாய்ந்தது.. தாய்ப்பால் சுரப்பை கூட்டவல்லது. இந்தக்கீரை மூளையைப் பலப்படுத்தவல்லது. இது பித்தத்தை தணிக்க வல்லது.. இதை உலர்த்தி சூரணம் செய்து காலை மாலை வெந்நீரில் குடிக்கலாம். உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இது வாய்வு கூடிய கீரை எனவே வாய்வு பிரச்சினை உள்ளவர்கள் வாய்வைக் கண்டிக்கும் உள்ளி, பெருங்காயம் சேர்த்துக் கொள்வது அவசியம்., தொண்டையில் புண் இருப்பின் இந்தக்கீரையை மென்று தின்றால் விரைவில் குணமாகும்.

ஆறு சுவையின் செயல்!

காரம்-உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணற்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.

கசப்பு - உடம்பிலுள்ள உதவாத கிருமிகளைஅழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சழியைக் கட்டுப்படுத்தும்.

இனிப்பு - உடம்பு தசையை வளர்ம்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.

புளிப்பு - இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.

துவர்ப்பு - இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

உப்பு - ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கதை ஏற்படுத்தும்

அன்னாசிப்பழம்

இந்த அன்னாசிப்பழம் இரத்தத்தைச் சுத்தி செய்கிறது. ஜீரணசக்தியை கூட்டும் தன்மையுள்ளது இதில் இருக்கும்-ப்றோமலென்| (Bromelan) என்னும் தாதுப்பொருள் வாதத்தை தணிக்கவல்லது. நன்கு பழுத்த,பழங்களையே சாப்பிடவேண்டும்.

அரைக்கருப்பன் சரியாக!

இது அரையாப்பு, மர்மஸ்தானங்களில் ஏற்படும் ஒருவித அரிப்புச் செறியாகும். இதற்கு கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள், ஆகியவற்றை வேகவைத்து அவற்றை தேங்காய் பாலில் ஊறவைத்து பின் வேகவைத்து அது நன்கு சுண்டக்காச்சி மென்மையான சூட்டில் அந்த இடங்களில் பூசினால் சில நாட்களில் குணமாகிவிடும்
Title: Re: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~
Post by: MysteRy on June 26, 2014, 07:42:35 PM
எளிய இயற்கை வைத்தியம்:-

(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpa1/t1.0-9/p235x350/10440764_754933964528921_4957033782767202909_n.jpg)


கட்டிகள் உடைய
மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.
பேன் தொல்லை நீங்க
வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.
மேனி பளபளப்பு பெற
ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.

தும்மல் வராமல் இருக்க
தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.
கரும்புள்ளி மறைய
எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.
தொண்டை கரகரப்பு நீங்க
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.
கருத்தரிக்க உதவும்
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
இருமல் சளி குணமாக
சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.
Title: Re: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~
Post by: MysteRy on July 21, 2014, 07:43:13 PM
எளிய இயற்கை வைத்தியம்:-

(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xaf1/t1.0-9/10389331_766686210020363_1910098890602972810_n.jpg)

கொய்யாப்பழத்தில் சத்து உள்ளது என்பதுபோல் அதன் இலையிலும் மருத்துவத்தன்மை உள்ளது என்று எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியாது. வயிற்றுப்போக்கை நிறுத்துவதில் ஆற்றல் படைத்தது கொய்யா இலை என்றால் அது மிகையல்ல........

* கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்­ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

* பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.

* சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.

* குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.

* காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.

* வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.
Title: Re: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~
Post by: MysteRy on August 02, 2014, 07:43:38 PM
எளிய இயற்கை வைத்தியம்:-

(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xfp1/t1.0-9/10520895_773975302624787_7293281937492256246_n.jpg)

குரல் மாற்றத்தை சரிசெய்ய:
கடுக்காய் தோல் சிறுதுண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கிகொள்ள வேண்டும். ஊறிய உமிழ் நீரை முழுங்கி விடவும்.
தொண்டைப் புண் ஆற:
வேப்பம் பூவை கொதிநீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் தொண்டை புண் ஆறும். அல்லது கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைக்க தொண்டைப்புண் ஆறும்.
தொண்டை நோய்:
மாதுளம் பூ சாற்றை காய்ச்சி வடிகட்டி அதனுடன் தேனும் கலந்து சாப்பிட தொண்டை நோய் அகலும்.
தொண்டை கரகரப்பு குணமாக:
சுக்கு, பால்மிளகு, திப்பிலி, ஏலரிசி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். அல்லது பூவரசன் வேர், பட்டை கஷாயம் செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணி அகலும்.
தொண்டைக் கட்டு குணமாக:
மாவிலை, பச்சை இலையை நெருப்பில் போட்டு புகையை வாய் திறந்து பிடித்தால் தொண்டைக்கட்டு குணமாகும். அல்லது மாவிலையை தேன் விட்டு வதக்கி நீரில் கலந்து அருந்த தொண்டைக்கட்டு, குரல் கமறல் தீரும்.
தொண்டை சதை வளர்ச்சி குறைய:
வில்வ இலை சாறு, துளசி இலை சாறு 100 வீதம் எடுத்து நல்லெண்ணை 500 மில்லியில் கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சி வடிகட்டி பாட்டிலில் வைக்கவும். தினசரி ஒரு கரண்டி எண்ணை எடுத்து வாயில் விட்டு சில நிமிஷங்கள் வாய் முழுவதும் ஒதுக்கி பின் கொப்பளிக்கவும். 10 தினங்கள் கொப்பளிக்க குணம் தெரியும்.
தொண்டை சதை குணமாக:
புளியையும், உப்பையும் சமஅளவு எடுத்து மைய அரைத்து நாக்கில் தடவிவர குணமாகும். அல்லது துளசி தைலத்தை அரைத் தேக்கரண்டி வாயிலிட்டு தொண்டை வரை கொப்பளித்து வர குணம் தெரியும்.
ஈறுகளில் ரத்தக்கசிவு குணமாக:
இலந்தை மரத்தின் கொழுந்துகளை பறித்து நீரில் காய்ச்சி சிறிது உப்பு சேர்த்து அந்நீரை வாய் கொப்பளிக்க ஈறுகளில் வரும் இரத்தக்கசிவு நிற்கும்
Title: Re: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~
Post by: MysteRy on August 09, 2014, 07:18:24 PM
எளிய இயற்கை வைத்தியம் :-

(https://scontent-a-pao.xx.fbcdn.net/hphotos-xpa1/t1.0-9/p526x296/10563068_777141745641476_5557080619206550545_n.jpg)


ஊறவைத்த வெந்தயத்தை நன்கு அரைத்து தயிரில் கலந்து 3வேளை சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். வயிற்று கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயும் கலந்து குடித்தால் சிறிது நேரத்தில் குணமாகிவிடும். எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும். நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

வெற்றிலை சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வெண்டைக்காயை அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தை செம்மைப்படுத்தும். ஞாபகசக்தி அதிகரிக்கும். மாதுளம் பழச் சாறுடன், தேன் கலந்து சாப்பிட மலச்சிக்கல் நீங்கும். ரத்தம் சுத்தமடையும். முருங்கைக் கீரை சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம்பைக் குழைத்து தொண்டை யில் தடவிக்கொண்டால் இருமல் நிற்கும். வில்வப் பூக்களை உலர்த்தி, பொடி செய்து தேனில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் குணமாகும்.

தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவி வர, சருமம் தங்கம் போல் மின்னும். பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு பிரச்னை சரியாகும். கிராம்பு, கற்பூரம், ஓமம் ஆகியவற்றை ஒரு சிட்டிகை வீதம் எடுத்து பொடி செய்து வீக்கம் உள்ள ஈறுகளில் சிறிது நேரம் வைத்து வாய் கொப்பளிக்க, ஈறு வீக்கம் குறையும். அருகம்புல்லையும் மஞ்சளையும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச, நல்ல நிவாரணம் கிடைக்கும்.

உலர்ந்த ரோஜா இதழ்களுடன் பன்னீரையும் சந்தனத்தையும் அரைத்து முகத்தில் தடவ, சருமம் பொலிவு பெறும். கிராம்பை வெற்றிலையுடன் சேர்த்துப் போட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும். வெந்தயக் கீரையுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்னியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும். வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண், இருமல் குணமாகும். வெந்தயம், சுண்டைக்காய் வற்றல், மிளகு அனைத்தையும் தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து, தினமும் சிறிதளவு வெறும் வயிற்றில் சாப்பிட உடல் எடை குறையும்.

மஞ்சள் தூளை நெய்யுடன் கலந்து காய்ச்சி சாப்பிட்டால் இருமல் நிற்கும். கிராம்பு பொடியுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால், உடல் உறுப்புகள் பலமாகும். பேரிக்காயை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகமாகும். எலுமிச்சை பழச்சாறு, தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் குணமாகும்.