FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on October 06, 2013, 12:33:32 AM

Title: என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் பகுதி -1
Post by: aasaiajiith on October 06, 2013, 12:33:32 AM
தன்னிகரில்லா தன் தனிப்பெரும்பான்மை
தகர்க்கபட்டுவிடுமோ ? எனும் தயக்கத்தினில்
கரும்பையும் தவிர அச்சிவெல்லத்தையும்
துணைக்கு கூட்டணியில் சேர்த்து 
தேவ அமிர்தத்தின் தேசிய தலைமையினில்
தேர்தலில் உனை தோற்கடிக்க துடிக்கின்றது
உன் இனிமையில் மலைத்து போன  மலைத்தேன்....
***************************************************************************
உச்சி நிலவின் உச்சக்குளிரழகு   
நட்சத்திரங்களின்  லட்ச  பார்வைகள் ,
இதயம்  வருடி,அதையே  திருடிடும்
இனிமையான  உன்  நினைவு, 
இவை,அத்தனையும் பொழுது புலர்ந்தும்கூட 
தொடரச்செய்யும் தந்திரம்  கொண்டது
உன் மந்திர  புன்னகை ....
****************************************************************************
காதல்  காதல் காதல்
காதலின் கண்ணியம் தனை
மேலும் கண்ணியம் செய்திடத்தானோ,
கனி கொஞ்சும் கன்னிக்கிளி
உன்  அறிமுகம் எனக்கு ..
Title: Re: என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் பகுதி -1
Post by: Arul on October 06, 2013, 06:32:45 PM
உச்சி நிலவின் உச்சக்குளிரழகு   
நட்சத்திரங்களின்  லட்ச  பார்வைகள் ,
இதயம்  வருடி,அதையே  திருடிடும்
இனிமையான  உன்  நினைவு, 

wow

மிக அருமையான வரிகள் ..........................
Title: Re: என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் பகுதி -1
Post by: aasaiajiith on October 07, 2013, 01:16:29 PM
வந்தமைக்கும்
வாசித்தமைக்கும்
வாழ்த்தியமைக்கும்
நன்றிகள் !!!
Title: Re: என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் பகுதி -1
Post by: micro diary on October 07, 2013, 01:50:17 PM
nala varigal and nala kavithai padaipu
Title: Re: என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் பகுதி -1
Post by: aasaiajiith on October 07, 2013, 02:25:21 PM
வந்தமைக்கும்
வாசித்தமைக்கும்
வாழ்த்தியமைக்கும்
நன்றிகள் !!!
Title: Re: என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் பகுதி -1
Post by: PiNkY on November 10, 2013, 01:07:32 AM
காதல்  காதல் காதல்
காதலின் கண்ணியம் தனை
மேலும் கண்ணியம் செய்திடத்தானோ,
கனி கொஞ்சும் கன்னிக்கிளி
உன்  அறிமுகம் எனக்கு ..


nice lines aasaiajith.. nengal kaviarasan thaan pola ;) nekum konjam kavidai tamil words lam kathu kodungalen
Title: Re: என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் பகுதி -1
Post by: aasaiajiith on November 15, 2013, 07:34:12 PM
வந்தமைக்கும்
வாசித்தமைக்கும்
வாழ்த்தியமைக்கும்
நன்றிகள் !!!
[/color=red]


KaviArasan endrellaam Ondrumillai Velir Rosaa Mullaiye !!
Kasappaaga irundhaalum kooda Nan oru Kaththu kutty Kavingan
Enbadhey Edhaartham.

Irundhum ,eppodhu enna keytaalum Therindhadhai Katru thara Thayaar !!
Title: Re: என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் பகுதி -1
Post by: PiNkY on November 15, 2013, 10:40:19 PM
K aasai ajith.. doubt na ungakite than kepn :P