FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: kanmani on October 05, 2013, 07:26:51 PM

Title: அன்னிய கிரகங்களின் எண்ணிக்கை 1,000ஐ நெருங்கலாம்
Post by: kanmani on October 05, 2013, 07:26:51 PM
சூரிய மண்டலத்திற்கு அப்பால் இருக்கும் கிரகங்களை ஆராய ஆராம்பித்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன, தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அன்னிய கிரகங்களின் எண்ணிக்கை 1,000ஐ நெருங்கலாம் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கிரகங்களின் எண்ணிக்கை பற்றி சில நாட்களிலோ அல்லது சில வாரங்களிலோ தெரியலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதுவரை 900க்கும் மேற்பட்ட அன்னிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சூரிய குடும்பத்திற்கு வெளியேயுள்ள கோள்கள் பற்றிய  அட்டவணை கண்டுபிடிப்புகளை ஐந்து முக்கிய தரவுத்தளங்களாக பிரித்து, அதில் 900க்கும் மேற்பட்ட புதிய உலகங்கள் நமது உலகுக்கு வெளியே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றும் அதில் இரண்டு முக்கிய தரவுத்தளங்களின் கணக்குப்படி 986 புதிய உலகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

1992ம் ஆண்டில் முதல் முறையாக பல்சார் அல்லது நியூட்ரான் நட்சத்திரத்தை சுற்றி வருவது ஆகிய 2 கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல்சார் கிரகம், பூமியிலிருந்து 1000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலான தொலைவில் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி அதிகமாக புதிய கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது. ஏற்கனவே இந்த கெப்ளர் தொலைநோக்கி பூமிக்கு அப்பால் உள்ள 3588 புதிய கிரகத்தில் இருந்து அடையாளம் காட்டியுள்ளது. ஒப்பந்தம் முடிவடைய இன்னும் குறைந்தது 90 சதவீதம் இருக்கும் என்று விஞ்ஞானிகள்  நம்புகின்றனர்.