FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Annakodi on October 05, 2013, 04:43:06 PM
-
பெண்ணியம் காப்பது கடமையாம்
சொல்லிக்கொள்கிறார்கள் !!!!
அம்மா! என்று மட்டுமே
அழைக்க கத்திருக்கும்
பச்சிளம் குழந்தைக்கு எப்படி தெரியும்
நீங்கள் ஆண்கள் என்று ?
பிறந்து மாதங்களே ஆன
சிசுவைகூட சிதைத்து
கள்ளிக் காட்டிலும்
முட்புதர்களிலும் வீசுகிறார்கள் !
இந்த காமுகர்கள்தான்
பெண்ணியம் காப்பது கடமையாம்
சொல்லிக்கொள்கிறார்கள் !!!!
வண்ண வண்ண பூக்களாய்
புதிதாய் பிறந்த புன்னகையோடு
பள்ளிக்குச் செல்லும்
அறியாச் சிறுமிகளை
அழித்து
தண்டவாளத்தில் வீசி எறியும்!
இந்த காமுகர்கள்தான்
பெண்ணியம் காப்பது கடமையாம்
சொல்லிக்கொள்கிறார்கள் !!!!
எதிர்காலத்தில்..
பல சாதனைகளை
தன் வசமாக்க துடிக்கும் எண்ணத்தோடு
கல்லூரிக்குச் செல்லும்
இளம் பெண்களை
காதல் என்ற சொல்லில்
லட்சிய கனவுகளை மறக்க செய்து
அவளை கட்டில் வரை கொண்டு சென்று
கசக்கி எறியும்
இந்த காமுகர்கள்தான்
பெண்ணியம் காப்பது கடமையாம்
சொல்லிக்கொள்கிறார்கள் !!!!
பல கஷ்டங்களையும் தாண்டி
இரவும் பகலும் உறங்காமல்
படித்து..
கடைசி வருடத்தில்
கடைசி நிமிடத்தில்
வாங்கும் கையெழுதிர்க்காக
கற்பையே விலையாக கேட்கும்
ஆசிரியர்கள்
இந்த காமுகர்கள்தான்
பெண்ணியம் காப்பது கடமையாம்
சொல்லிக்கொள்கிறார்கள் !!!!
-
மிக மிக அருமையாக உண்மையை வெளிப்படையாக சொல்லியிருப்பது மிக அருமை
வாழ்த்துக்கள் அன்னக்கொடி
இது போன்று இன்னும் நிறைய எழுத வேண்டும் எதிர்பார்க்கிறோம் தங்கள் எழுத்துகளுக்கு..........
-
thanku u aru;