FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ராம் on October 04, 2013, 03:35:39 PM
-
உனது நினைவுகள் எனக்கு விடுதலை
தரவந்த சிறகுகள் என்றெண்ணி
நான் பறக்க துடிக்க
நீ மட்டும் ஏன்
என் நினைவுகளை மனமின்றி
சிலுவை போல சுமக்கிறாய்
ஆணிகள் தேடி தான் அறைய நினைக்கிறன்
உன்னில் பதிய மறுக்கும்
எனது நினைவுகளை உன் மனதில்
முடியவில்லை
ஆனால் பாரேன்
உனது நினைவுகளால்
நிறைந்த பின்னும் கூட
துடிக்க மட்டுமே தெரிந்த
என் மனம்
அடங்காமல் இன்று
துள்ளவும் செய்கிறது
நிஜத்தில் உனக்காக....