FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on October 02, 2013, 11:46:29 PM

Title: பெங்காலி ஸ்டைல்: பூனி கிச்சடி ரெசிபி
Post by: kanmani on October 02, 2013, 11:46:29 PM
தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1 கப்
பிரியாணி இலை - 2
பச்சை ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பட்டை - 1
வரமிளகாய் - 1
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
பட்டாணி - 1/2 கப்
கேரட் - 1 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
சர்க்கரை - 1 டீஸ்பூன்
முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நீர் - 4 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா பொடிக்கு...

வரமிளகாய் - 2
பச்சை ஏலக்காய் - 2
கிராம்பு - 4
பட்டை - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெங்காய விழுது - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பை லேசாக 4-5 நிமிடம் வறுத்து, குளிர வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரிசியை நன்கு கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் கரம் மசாலாவிற்கு கொடுத்த அனைத்து பொருட்களையும், லேசால வறுத்து, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரியை போட்டு 2 நிமிடம் வறுத்து, தனியாக தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு, வரமிளகாய், வெங்காயம் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் கிளறி, பட்டாணி, கேரட், உருளைக்கிழங்கு சேர்த்து 3-4 நிமிடம் வதக்கி, தக்காளியைப் போட்டு, 5 நிமிடம் வதக்க வேண்டும். பின் வறுத்து வைத்துள்ள பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள கரம் மசாலாவை சேர்த்து, 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு துருவிய தேங்காய், உப்பு, சர்க்கரை, உலர் திராட்சை மற்றும் முந்திரி சேர்த்து, 5 நிமிடம் கிளறி, வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கினால், சூப்பரான பெங்காலி ஸ்டைல் பூனி கிச்சடி ரெடி!!!