FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on October 02, 2013, 02:04:59 PM

Title: ~ குழந்தைகளுக்கு ஏற்படும் பருவ ஆஸ்துமா பற்றிய தகவல்கள்:- ~
Post by: MysteRy on October 02, 2013, 02:04:59 PM
குழந்தைகளுக்கு ஏற்படும் பருவ ஆஸ்துமா பற்றிய தகவல்கள்:-

(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn2/1374100_618072468215072_1381247951_n.jpg)

இன்றைய சூழ்நிலையில் குழந்தைகள் பலருக்கு ஆஸ்துமா நோய் தாக்கம் ஏற்படுகின்றது.மாசடைந்த சூழழும் தூசி அலர்ஜி போன்றவைகளினாலும் எண்ணற்ற குழந்தைகள் ஆஸ்துமா நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அவர்கள் உபயோகிக்கும், படுக்கையறை, பொருட்கள் போன்றவற்றை சுத்தமாக வைத்துக்கொண்டால் ஆஸ்துமா நோய் தாக்காமல் பாதுகாக்கலாம் என்கின்றனர் குழந்தை மருத்துவர்கள்.

குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய் பரம்பரை நோயல்ல. அதிகபட்சமாக குழந்தை பருவ ஆஸ்துமா நோய் அலர்ஜியால் ஏற்படக்கூடியது. பூக்களின் மகரந்த தூள்கள், வீட்டுத்தூசு, மிருகக்கழிவு, போன்றவற்றால் இது ஏற்படுகிறது.

நோயெதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளை இந்த ஆஸ்துமா தாக்குகிறது. குளிர்காற்று, வீரியம் மிக்க வாசனை, புகை போன்றவற்றாலும் வைரஸ் நுண்கிருமிகள் மூலம் ஏற்படும் தொற்று நோயாலும் ஏற்படக்கூடும்.

சில குழந்தைகளுக்கு மூன்று வயதிற்குப் பிறகே வீசிங் என்னும் மூச்சுத் திணறல் ஏற்படத் தொடங்குகிறது. இது சாதாரணமாக 8 வயதிற்கு முன்பாக குணமாகிவிடும். லேசான விட்டு விட்டு ஏற்படும் ஆஸ்துமா வருடத்திற்கு 3 அல்லது 4 முறை ஏற்படும். 10 முதல் 12 வயதிற்குள் சரியாகிவிடும். நடுத்தர கடுமையான ஆஸ்துமாவில் குழந்தைகளுக்கு நோயின் அறிகுறிகள் 2 வயதிற்கு முன்னரே ஆரம்பிக்கும்.நோயின் கடுமை அதிகாமாகவும், நீடித்தும் இருக்கும். இந்நோய் முழுமையாக குணமடையாது பிற்காலத்திலும் நீடிக்கும்.


ஆஸ்துமா ஏற்படாமல் இருக்க சுத்தமாக வீடுகளை வைத்துக்கொள்ள வேண்டும்.புகை பிடிப்பவரின் அருகில் தூசி படியும் இடங்களில் குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டாம்..நாய்,பூனை போன்றவைகளின் முடிகளால் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது.சில குழந்தைகளுக்கு சத்து குறைவினாலும் ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் கூறயுள்ளனர்