FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on October 02, 2013, 12:00:20 AM
-
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
குடைமிளகாய் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தக்காளி கெட்சப் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவைப் போட்டு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ள வேண்டும். பின் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் உற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு குடைமிளகாய், உப்பு, மிளகு தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் கிளறி விட வேண்டும். அடுத்து தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் தக்காளி கெட்சப் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 5 நிமிடம் நன்கு வேக வைத்து இறக்க வேண்டும். கலவையானது குளிர்ந்ததும், உருண்டைகளை சப்பாத்திகளாக தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி சப்பாத்தி செய்து கொள்ள வேண்டும்.
இறுதியில் அந்த ஒவ்வொரு சப்பாத்தியிலும் குடைமிளகாய் கலவையை சிறிது பரப்பி, ரோல் செய்து கொள்ள வேண்டும். இப்போது சூப்பரான குடைமிளகாய் ரோல் ரெடி!!! குறிப்பு: ஒருவேளை இரவில் செய்த சப்பாத்தி இருந்தால், அதனை சூடேற்றிக் கொண்டும், இந்த ரெசிபியை செய்யலாம்.