FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on October 01, 2013, 11:58:43 PM
-
தேவையான பொருட்கள்:
நேந்திரங்காய் - 1
மஞ்சள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் நேந்திரங்காயை தோலுரித்து, அதனை வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கப் தண்ணீரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, அந்த தண்ணீரில் நறுக்கிய நேந்திரங்காய் துண்டுகளைப் போட்டு, 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு அதனை வெளியே எடுத்து, நறுக்கிய நேந்திரங்காய் துண்டுகளை நன்கு உலர வைக்க வேண்டும். தண்ணீர் முற்றிலும் வற்றியப் பின், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி , காய்ந்ததும், உலர வைத்த துண்டுகளைப் போட்டு, நன்கு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான நேந்திரம் சிப்ஸ் ரெடி!!!