FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on October 01, 2013, 11:57:05 PM

Title: புடலங்காய் மசாலா
Post by: kanmani on October 01, 2013, 11:57:05 PM
தேவையான பொருட்கள்:

புடலங்காய் - 1 (பொடியாக நறுக்கியது)
சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 3
துருவிய தேங்காய் - 1/4 கப்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கடலைப்பருப்பு - 1/2 கப் (வேக வைத்தது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மிக்ஸியில் சோம்பு, 2 வரமிளகாய், தேங்காய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் உற்றி காய்ந்ததும், கடுகு, 1 வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, புடலங்காயைப் போட்டு நன்கு 2-3 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள மாலாவைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பின்பு கடலைப்பருப்பை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு கிளறி, மீண்டும் மூடி வைத்து 2-3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சூப்பரான புடலங்காய் மசாலா ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.