FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: MysteRy on October 01, 2013, 08:57:25 PM

Title: ~ ஏழைகள் என்று எப்படி சொல்ல முடியும்?..~
Post by: MysteRy on October 01, 2013, 08:57:25 PM
ஏழைகள் என்று எப்படி சொல்ல முடியும்?..

(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn2/1381360_621382671245399_1042620289_n.jpg)


ஒரு ஊரில் ஒரு பெரும் பணக்காரர்
இருந்தார். அவருக்கு ஒரே மகன்.
மிகவும் செல்லமாக அவன்
வளர்க்கப்பட்டான். பருவ
வயது வந்தது அவனுக்குப்
பொறுப்புத் தர எண்ணினார் அவர்.

ஆனால் மகனுக்கு உலக
வாழ்க்கை இன்னதென்று விளங்கவில்
அவன் உலகத்தைத் தெரிந்த
பின்பு அவருக்குப் பொறுப்புத்
தரலாம் என்று எண்ணினார்.
அவனை ஒரு மாத காலம் ஏழைகள்
வாழும் கிராம பகுதியில் அந்த
மக்களோடு மக்களாகத்
தங்கி வாழ்ந்து பின்வருமாறு பணித்த
ஒரு மாதம் ஆனபின்பு மகன்
வீட்டுக்கு வந்தான்.

தந்தை கேட்டார் என்ன
மகனே வாழ்க்கையில் என்ன
கற்றுக்கொண்டாய் என்றார்.
நிறைய அவர்களிடம்
அறிந்து கொண்டேன் அப்பா.
அவர்கள் நம்மை விட
பணக்காரர்களாகவும்,
சுதந்திர மானவர்களாகவும்,
சுகமாகவும், பயமற்றும்
வாழ்கிறார்கள் என்றான்.
தந்தை எப்படிச் சொல்கிறாய் என
கேட்டார்.

நாம் இங்க அலங்கார
செயற்கை விளக்குகள்
ஏற்றி வாழ்கிறோம்.
அவர்களோ நட்ச்சதிரங்களைய
ே விளக்குகலாகக்
கொண்டு வாழ்கிறார்கள்.
நாம் நமக்கான
உணவையே விலை கொடுத்து வாங்கி
அவர்கள் தங்களுக்கான உணவைத்
தாங்களே உற்பத்தி செய்கிறார்கள்.
நான் அறைகளுக்குள் வாழ்கிறோம்.
அவர்களோ சுதந்திரமாக சந்தோசமாக
பரந்த வெளியில் வாழ்கிறார்கள்.
இப்பொழுது சொல்லுங்கள் தந்தையே,
அவர்களை ஏழை என்கிறார்கள்.
சுதந்திரமாகவும், சந்தோசமாகவும்,
தன் உணவைத்
தாங்களே உற்பத்தி செய்பவராகவும்,
உறவுகளோடு ஒன்றி
மகிழ்பவர்களாகவும் இருப்பவர்களை
ஏழைகள் என்று எப்படி சொல்ல
முடியும்?

இவைதான் நான் அவர்களிடமிருந்த
ு கற்றது என்றான்.
ஆம்,நண்பர்களே,
ஏழ்மை என்பது நம்
எண்ணத்திலேயே குடி கொண்டால்
என்னதான் வசதி கிடைத்தாலும்
ஏழ்மையிலுருந்து
விடுதலை கிடைக்காது.
எனவே வாழ்க்கை என்பது சுதந்திரத்தி்,
உறவுகளிலும் மலர்ந்திருக்கிறது.