ஆர்ம் வொர்க் அவுட்ஸ்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmimages.maalaimalar.com%2FArticles%2F2013%2FSep%2F4a89aceb-571b-41ad-84a5-2d46649cc3f5_S_secvpf.gif&hash=31bfcaa93b6becf02b74ea80570a449205d63288)
உடலை வளைத்து வேலை செய்வது இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. விளைவு உடலில் ஆங்காங்கே தேவையற்ற இடங்களில் தசைகள் அதிகரித்து அழகைக் கெடுத்துவிடுகிறது.தசைகளைக் கரைக்கக்கூடிய சில எளிமையான பயிற்சிகளை உள்ளது.
இந்த பயிற்சிகளை வீட்டில் ஒய்வு நேரங்களில் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த பயிற்சி வயிறு, தொடை பகுதியில் உள்ள தேவையற்ற சதை குறைய உதவுகிறது.
இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால்களை அகட்டி வைத்து நேராக நிற்கவும். பந்தை எடுத்துக் கொள்ளவும். பந்தை மார்புக்கு நேராக வைத்துக் கொள்ளவும். கைகளில் பந்தை நேராக வைத்துக் கொண்டு வலது மற்றும் இடதுபுறம் கைகளை முழுமையாக அசைக்கவும்.
இதுபோல் ஆரம்பத்தில் 20 முறை செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறை செய்யலாம். இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பலன்கள்: வயிற்றுப் பகுதியின் தசைகள் சீராகும். வயிறு, மார்பு, தொடைப் பகுதியில் உள்ள தேவையற்ற தசைகள் கரையும். ரத்த ஓட்டம் சீராகும்