டவுன் வேர்டு சைடு ஸ்ட்ரெச்சிங் பயிற்சி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmimages.maalaimalar.com%2FArticles%2F2013%2FSep%2F8128d6de-c794-4a3a-83d8-b3d216f80b0c_S_secvpf.gif&hash=af7016e4a581ad15b466b3db93369071e9897c06)
இந்த பயிற்சி செய்வதால் உடல் சுறுசுறுப்படையும். தோள்பட்டை தசைகள் வலுவடைய இந்த பயிற்சி மிகவும் சிறந்தது. முதலில் விரிப்பில் இரண்டு காலையும் அகட்டியபடி நின்று கொள்ளவும். வயிற்றுப் பகுதியின் மத்தியில் பந்தை வைத்துக் கொள்ளவும்.
அப்படியே வலது பக்கமாகத் திரும்பி கீழ் இருந்து மேல் நோக்கிப் பந்தைக் கொண்டு வர வேண்டும். பின்னர் இதே போல் இடது வலது பக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு ஆரம்பத்தில 20 முறை செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முதல் 40 முறை செய்யலாம்.
பலன்கள்: கால் நரம்பு மற்றும் எலும்புகள் வலுவடையும். கழுத்து, முதுகு, தோள்பட்டை, தசைகள் வலுவாகும். தொடர்ந்து இந்த உடற்பயிற்சியைச் செய்தால் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கலாம்.