FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Maran on October 01, 2013, 06:59:16 PM

Title: விடுதலை
Post by: Maran on October 01, 2013, 06:59:16 PM
விடுதலை
பெற்றோம்
உரிமைக்கு

அடிமையாகவே
இருக்கிறோம்
உணர்வுகளுக்கு

புலியும் கயலும்
வில்லுமாய்
பிரிந்திருந்தோம்

தெள்ளமுதாம் தமிழ்
இணைக்க
மெய்யமுதாம் தண்ணீருக்காய்
கன்னடிகர்
எனப் பிரிகிறோம்

மண் தாய்தான்
எதிர்பார்ப்பின்றி கொடுத்தலிலும்
எந்தப் பிழையும் பொறுத்தலிலும்
இந்தியர் என்றிணைந்தால்
கற்பனைக் கோடுகளால்
நாலாப்புறமும் பிரிகிறோம்

எல்லாமே இறை
இணைகிறோம்
என்னிறை உன்னிறை
எனப் பிரிகிறோம்

பிரிவினைகளால்
மட்டுமே
இணைந்திருக்கிறோம்

உரிமைகளுக்கு கிடைத்த
விடுதலை கிடைக்குமா
பிரிவினை உணர்வுகளுக்கு?

- Anonymous
Title: Re: விடுதலை
Post by: micro diary on October 03, 2013, 02:51:55 PM
arumaiyana kavithai maran