FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on September 30, 2013, 11:31:58 PM
-
1. உதிராக வடித்த சாதம் - 1 பவுல்
2. எலுமிச்சை - 1 பெரியது
3. பச்சை மிளகாய் - 2
4. கறிவேப்பிலை - சிறிது
5. கேரட் - 1 பெரியது
6. கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க
7. எண்ணெய் - தாளிக்க
8. உப்பு
9. மஞ்சள் தூள் - சிறிது
10. பெருங்காயம் - சிறிது
எலுமிச்சை பிழிந்து சாறு எடுக்கவும். இதில் 1/4 கப் நீர் விட்டு வைக்கவும்.
பச்சை மிளகாய் நறுக்கி, கேரட் தோல் நீக்கி துருவி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
பின் பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
இதில் துருவிய கேரட் சேர்த்து பிரட்டி 2 நிமிடம் மூடி விடவும்.
இதில் எலுமிச்சை கலவை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறு தீயில் கொதிக்க விடவும்.
மஞ்சள் தூள் வாசம் போனதும் எடுத்து சாதத்தில் சேர்த்து கலந்து விடவும்.
1/2 மணி நேரம் சாதம் ஊறிய பின் பரிமாறவும். சுவையான கேரட் எலுமிச்சை சாதம் தயார்.
Note:
இந்த சாதம் கலர்ஃபுல்லாகவும் சத்தானதாகவும் லன்ச் பாக்சுக்கு கொடுத்து விட உகந்தது. விரும்பினால் வேர்கடலை, முந்திரி போன்றவை கூட தாளிக்கும் போது வறுத்து சேர்க்கலாம். மீதமான சாதத்தில் கூட செய்து உடனே கொடுக்க இயலும்.