FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 30, 2013, 02:13:36 PM

Title: ~ முடி உதிர்தல், இளநரை சரியாக.... ~
Post by: MysteRy on September 30, 2013, 02:13:36 PM
முடி உதிர்தல், இளநரை சரியாக....

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-WlmAum0l0FY%2FUgc2KdBPeuI%2FAAAAAAAANpc%2Fc6BLffNZkE4%2Fs400%2F22222.jpg&hash=07c21c9fe9f03bfe24f41b1335eaabfd3fd1cc7d)


கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையா அரைச்சி, அதோட அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பதத்துக்கு வந்ததும் இறக்கி வச்சிரணும். வழக்கமா தலைக்கு எண்ணெய் தேய்க்கிற மாதிரி அதை தேய்ச்சிட்டு வந்தா....முடி உதிர்றது, இளநரை எல்லாம் சரியாகும்.

கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து சாப்பிட்டாலும் நரை விழுற பிரச்னை சரியாகும்.

மருதாணி இலை 300 கிராம், நல்லெண்ணெய் 1 1/2 லிட்டர், பசும்பால் 700 மில்லி சேர்த்து பதமா காய்ச்சி, தலைக்கு தேய்ச்சிட்டு வந்தா...கூந்தல் நல்லா வளரும். அதோட நரை விழுறதையும் தடுக்கும்.