FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 29, 2013, 11:19:23 PM

Title: ~ குழந்தைகளின் வெட்டுக்காயத்திற்கு முதலுதவி:- ~
Post by: MysteRy on September 29, 2013, 11:19:23 PM
குழந்தைகளின் வெட்டுக்காயத்திற்கு முதலுதவி:-

(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn2/1375971_616207858401533_1140289351_n.jpg)


* வெட்டுக்காயம் பட்ட குழந்தையை அழைத்துச்சென்று சற்று வெதுவெதுப்பான நீரில் வெட்டுப்பட்ட இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

* கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தால் மிக நல்லது.

* தூய்மையான பஞ்சினைக் கொண்டு நீரின்றி சுத்தம் செய்ய வேண்டும்.

* பிறகு காயத்தின் மீது டிஞ்சர் போன்ற களிம்போ அல்லது சோப்பு நீரை அதன் மீது ஊற்றி, சுத்தம் செய்தப்பின் சிறிது நேரம் உலற விட வேண்டும்.

* நன்கு காய்ந்தப் பிறகு, அதன் மீது காயத்திற்கான களிம்பினை பூசி, அதன் மீது தூய்மையான பஞசினை வைத்து, தூய்மையான துணியோ அல்லது கட்டுத்துணியோ பயன் படுத்தி கட்டுப்போடலாம்.

* காயம் மிக ஆழமாக இருந்தால் முதலுதவிக்கு பிறகு, மருத்துவரை அணுகுவது நல்லது.

கையோடு முதலுதவிக்கு தேவையானப் பொருட்களை ஒரு பெட்டியில் வைத்து, கையோடு வைத்திருந்தால் உங்களுக்கும் நல்லது உங்கள் சுற்றத்தாருக்கும் நல்லது